.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பெரம்பலூர் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ66,000 மதிப்பிலான நலதிட்ட உதவிஉதவிகள் வழங்கப்பட்டன.!

Unknown | 9:20 PM | 0 comments


  பெரம்பலூரில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.



பெரம்பலூர்

இதேபோல் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கூட்ட அரங்கில், கலெக்டர் தரேஸ் அஹமது தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில், பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலை வாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா, உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 391 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர். மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலர் களிடம் அளித்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற் கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத் தினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் மூலம் 14 நபர்களுக்கு தலா ரூ.3 ஆயிரத்து 600 வீதம் ரூ.50 ஆயிரத்து 400 மதிப் பிலான தையல் எந்திரங் களையும்,. 6 நபர்களுக்கு தலா ரூ.2 ஆயிரத்து 600 வீதம் ரூ.15 ஆயிரத்து 600 மதிப்பிலான சலவை பெட்டியையும் அவர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) மலையாளம், துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) முருகேஸ்வரி, உதவி திட்ட அலுவலர் குமரன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் அலுவலர் முனு.துரைசாமி, மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1