.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

ஆத்தூரில் பரபரப்பு ஒரே பஸ்சில் 250 பேர் பயணம்: நெரிசலில் சிக்கி 3 மாணவிகள் மயக்கம்!

Unknown | 1:46 PM | 0 comments

 

ஆத்தூர் அருகே பஸ் வந்த போது கடம்பூரைச் சேர்ந்த 9ம் வகுப்பு  மாணவி வினிஷா (14), ராமநாதபுரத்தைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி  ஷோபனா (15), பைத்தூரைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி கீர்த்தனா (17)  ஆகியோர் நெரிசலால் மூச்சுத்திணறி மயக்கம் அடைந்து சரிந்தனர்.  இதைப்பார்த்து சக மாணவ, மாணவிகள் கூச்சல் போட்டனர்.  இதனால்  ஆத்தூர் அரசு மருத்துவமனை நோக்கி பஸ்சை டிரைவர் வேகமாக  ஓட்டிச்சென்றார். மயக்கம் அடைந்த மாணவிகளை மருத்துவமனையில்  சேர்த்தனர். அவர்களுக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.  தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து  மாணவர்களின் பெற்றோரும் மருத்துவமனையில் குவிந்தனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த,  போக்குவரத்துக்கழக பணிமனை அதிகாரிகள் மருத்துவமனைக்கு  வந்தனர். அவர்களிடம் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கூடுதல்  பஸ்களை இயக்க கோரிக்கை வைத்தனர். இதுபற்றி நடவடிக்கை  எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து, பயணிகளுடன்  டவுன் பஸ், ஆத்தூர் பஸ் ஸ்டாண்டிற்கு புறப்பட்டுச் சென்றது.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1