மைசூர் பல்கலையில் பி.ஆர்க்., எம்.ஆர்க். படிப்புகள்!!
மைசூர் பல்கலைக்கழகம், தான் வழங்கும் 5 ஆண்டு பி.ஆர்க்., படிப்பிற்கும், 2 ஆண்டு எம்.ஆர்க்., படிப்பிற்கும் விண்ணப்பங்களை வரவேற்கிறது.
பி.ஆர்க். படிப்பில் சேர, குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களை பள்ளிப் படிப்பில் பெற்றிருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 45% இருந்தால் போதும்.
எம்.ஆர்க். படிப்பில் சேர, பி.ஆர்க். படிப்பு அல்லது அதற்கு சமமான இளநிலைப் படிப்பில், குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களைப் பெற வேண்டும்.
திறனறி தேர்வின் அடிப்படையிலும், மெரிட் அடிப்படையிலும் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் கடைசித் தேதி - ஜுலை 3.
விரிவான அனைத்து விபரங்களுக்கும் www.uni-mysore.ac.in.
Category: உயர் கல்வி

0 comments