.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை!   துபாயில் வேலை தேடுவோரின் கனிவான கவனத்திற்கு !   உலகில் முதல் முறையாக இதய நோயாளிகளுக்கு ‘இறந்த’ இதயம் பொருத்தம்!   மருந்தில்லா மருத்துவம் - இயற்கை மருத்துவம்:-   குன்னம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்!   ‘கேம்பஸ் இண்டர்வியூ’ பலி ஆடுகளாகும் மாணவர்கள்! – அதிர்ச்சி உண்மைகள் – பதறவைக்கும் தகவல்கள்!   தமிழகத்தில் பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு!   பெரம்பலூரில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்? பொதுமக்கள் அச்சம்!!   ஹிஜ்ரி காலண்டர் உருவான வரலாறு!   உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத் திட்ட உதவிகள் பெறலாம்- கலெக்டர் தரேஸ் அஹம்மது அறிக்கை!    undefined

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

ஆரோக்கியமாக வாழ சில அறிவுரைகள்!

Unknown | 2:27 PM | 0 comments


* தூங்கப் போவதற்கு முன், தினமும் கை, கால்கள், முகத்தை கழுவுங்கள்; பற்களையும் சுத்தம் செய்யுங்கள். சிறிது நேரம் வாய்க்குள் தண்ணீரை வைத்து, நன்றாக வாயை கொப்பளியுங்கள்.
* தினமும் நன்றாக தூங்குங்கள். மாதத்தில் ஒரு முறையாவது கண்ணாடி முன் நின்று, உங்கள் உடலை பாருங்கள். அப்படி பார்த்தால், உடலில் ஏற்படும் சுருக்கங்கள், படைகள் போன்றவைகளை கண்டறியலாம்.
* உணவில் பச்சை காய்கறிகளையும், பழ வகைகளையும் தேவையான அளவு சேருங்கள்.
* முடிந்த அளவு வாகன பயணங்களை மேற்கொள்ளாதீர்கள்; அதிகமான தூரம் நடந்து செல்ல முயற்சி செய்யுங்கள்.
* தினமும் குறைந்தது, 50 முறை உட்கார்ந்து எழுவது நல்லது. அப்படி செய்தால் இடுப்பு அழகுப்படும்; தொந்தியும், வயிறும் குறையும்.
* குளிக்கும் போது எப்போதும் குதிகாலையும், கால் விரல்களையும் தேய்த்து கழுவுங்கள்.
* படுக்கைக்கு அருகிலும், வேலை பார்க்கும் இடத்துக்கு அருகிலும், ஒரு பாட்டிலில் தண்ணீர் எடுத்து வைத்து கொள்ளுங்கள். தேவைப்படும் போதெல்லாம் தண்ணீர் குடியுங்கள்.
* முளைவிட்ட கடலை, சிறுபயறு போன்றவைகளை காலை உணவில் சேர்க்க வேண்டும்.
* கை நகங்களை வெட்டி சுத்தம் செய்வதை, கடமையாக கொள்ளவும்.
* உறங்கும் போது பட்டு துணிகளை அணியுங்கள்.
* அதிக சூடு, அதிக குளிர் உணவுகள் பற்களுக்கு கேடு பயக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
* இரவு இனிப்பு பலகாரங்கள் சாப்பிட்டால், மறக்காமல் பற்களை சுத்தப்படுத்தி விடுங்கள்.
* இரவில் அதிக நேரம் விழித்திருப்பதும், பகலில் தூக்கம் போடுவதும் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல.
* கொழுப்பு நிறைந்த எண்ணெயை உணவில் சேர்க்காதீர்கள்; அது, உடல் அழகுக்கும், ஆரோக்கியத்திற்கும் கேடு பயக்கும்.
* தினமும் காலையில் தேநீரோ, குழம்பியோ( காபி)குடிப்பதற்கு முன், ஒரு பழம் சாப்பிடுவது நல்லது.
* தினமும் காலையில், 10 நிமிடமாவது உடற்பயிற்சி செய்யுங்கள்

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1