சென்னை விமான நிலையத்தில் 21வது முறையாக கண்ணாடி விழுந்து விபத்து!
சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து விழுந்து 21 வது முறையாக விபத்து நேர்ந்துள்ளது.
சென்னை விமான நிலையம் 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திறந்து வைக்கப்பட்டது. விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டதில் இருந்து இத்துடன் 20 வது முறையாக மேற்கூரை, கண்ணாடி ஜன்னல் என்று உடைந்து விழுந்து விபத்து நேர்ந்துள்ளது. இன்று 21 வது முறையாக உள்நாட்டு முனையத்தின் மேற் கூரையிலிருந்த மிகப்பெரிய கண்ணாடி ஒன்று உடைந்து விழுந்துள்ளது. பயணிகள் மற்றும் அதிகாரிகள் உயிர்ப் பயத்தில் அலறி ஓடியுள்ளனர்.
இருப்பினும் விபத்துக் குறித்து கருத்துத் தெரிவிக்க அதிகாரிகள் மறுத்துள்ளனர் என்பதுக் குறிப்பிடத் தக்கது.
Category: மாநில செய்தி


0 comments