மதுரை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்!!
கோடைகால விடுமுறையை ஒட்டி மதுரையிலிருந்து திருச்சி, சென்னை வழியாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு வாரந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
பிரிமியம் அதிவேக சிறப்பு ரயில் எனப்பெயரிடப்பட்ட இந்த சிறப்பு ரயில் மே 17-முதல் ஜூலை 1-ம் தேதிவரை 7 வாரங்களுக்கு இயக்கப்படுகின்றது. மே 17-ம் தேதி முதல் சனிக்கிழமைகளில் பிற்பகல் 4.50-க்கு ஜெய்பூரிலிருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயில் (எண்.09723) திங்கள் கிழமை காலை 8.50 மணிக்கு திருச்சியை கடந்து 11.05 மணிக்கு மதுரையை அடைகின்றது.
அதேபோல எதிர்மார்க்கத்தில் மே 20-ம் தேதிமுதல் செவ்வாய்கிழமைகளில் மதுரையிலிருந்து காலை 6.30-க்கு புறப்படுமே சிறப்பு ரயில் (எண்.09724) திருச்சியை 8.50 மணிக்கு கடந்து புதன் நள்ளிரவு (வியாழன்) 12.45 மணிக்கு ஜெய்ப்பூரை சென்றடையும்.
வழியில் போபால், நாக்பூர், விஜயவாடா, சென்னை சென்ட்ரல், திருச்சி ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும். இதில் இரண்டடுக்கு குளிர்சாதன பெட்டி ஒன்று,மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகள் 3, இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் 13, லக்கேஜுடன் கூடிய இரண்டாம் வகுப்பு பெட்டிகள் 2 ஆகியன இணைக்கப்பட்டுள்ளன. இதற்கான முன்பதிவுகள் துவங்கிவிட்டன.
Category: மாநில செய்தி
0 comments