.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பிளஸ் 2 தேர்வில் மகன் குறைவான மதிப்பெண் எடுத்ததால் தந்தை தற்கொலை!!

Unknown | 7:41 AM | 0 comments

திருச்சி செங்குளம் காலனி அருகே மகன் பிளஸ் 2 தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் தந்தை தற்கொலை செய்து கொண்டது சனிக்கிழமை தெரியவந்தது.
கல்லுக்குழி, செங்குளம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (45). பொதுப்பணித்துறை ஊழியர். இவரது மனைவி எய்டா. இவர்களது ஒரே மகன் மோகன் (17). இவர் சேலத்திலுள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து தேர்வு எழுதியிருந்தார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை வெளியான தேர்வு முடிவில் இவர் குறைவான மதிப்பெண் எடுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சேகர் தனது மகன் மோகனை அடித்துள்ளார். இதனால் விரக்தியில் மோகனை அவரது தாய் எய்டா அழைத்துக்கொண்டு கைலாஷ்புரத்திலுள்ள தனது அண்ணன் வீட்டிற்கு சென்றார்.
பின்னர் சனிக்கிழமை அவர் வீட்டிற்கு வந்து பார்த்த போது அங்கு சேகர் தூக்கிட்ட நிலையில் கிடந்ததை பார்த்தும் அதிர்ச்சியடைந்து மயங்கி விழுந்தார். தகவலறிந்த கண்டோன்மென்ட் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1