பெரம்பலூரில் எம்பிராய்டரி, ஆடை அச்சுக் கலைப் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது!!
பெரம்பலூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் எம்பிராய்டரி மற்றும் ஆடைகளில் அச்சுக்கலை இலவசப் பயிற்சி பெற அழைப்பு விடுத்துள்ளார் மையத்தின் இயக்குநர் ஜி. பார்த்தசாரதி.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் மே 26 முதல் இந்தப் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது.
18-லிருந்து 35- வயதுக்கு குறைவாகவும், குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு படித்தவராகவும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும், சுயதொழில் தொடங்குவதில் ஆர்வமுள்ளவராகவும் இருக்க வேண்டும். தொடர்ந்து 15 நாள்கள் நடைபெறும் பயிற்சியானது காலை 10 மணி முதல் மாலை 5.30 வரை நடைபெறும். பயிற்சி காலத்தில் மதிய உணவு இலவசமாக வழங்கப்படுவதோடு, பயிற்சி முடித்தவுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள் பெரம்பலூர் ரெங்கா நகரில் உள்ள இந்திய ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநரிடம் தங்களது பெயர், வயது, முகவரி, கல்வித் தகுதி ஆகியவற்றைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பள்ளியின் மாற்றுச் சான்றிதழ் ஆகியற்றின் நகல், 4 பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றையும் இணைத்து அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04328 277896 .
Category: மாவட்ட செய்தி
0 comments