.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

தொழில்நுட்ப கல்லூரிகள் துவக்க முன் அனுமதி அவசியம்: ஏ.ஐ.சி.டி.இ. அறிவிப்பு!!

Unknown | 9:34 PM | 0 comments

சென்னை: தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள், எம்.பி.ஏ., உள்ளிட்ட மேலாண்மை படிப்புகளை துவக்கினாலோ, புதிய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் துவக்கப்பட்டாலோ, முன் அனுமதி பெற வேண்டும் என, அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,) அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் பொறியியல், தொழில்நுட்பம் சார்ந்த பல்கலைகள், கல்வி நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் இயங்கி வருகின்றன. இவை அனைத்தும் ஏ.ஐ.சி.டி.இ. மற்றும் யு.ஜி.சி.யின் அனுமதி, அங்கீகாரம் பெற்றே இயங்குகின்றன.
இந்நிலையில், "புதிய தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் கல்லூரிகள் துவக்குவதற்கான அனுமதியை யு.ஜி.சி.யிடம் பெற வேண்டும்" என, அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஓராண்டிற்கு புதிய கல்லூரிகளுக்கான அனுமதியை யு.ஜி.சி. நிறுத்தி வைத்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், புதிய தொழில்நுட்ப பல்கலைகள் கல்லூரிகளுக்கான அனுமதி வழங்கும் பணியை ஏ.ஐ.சி.டி.இ.க்கு சுப்ரீம் கோர்ட் மீண்டும் வழங்கியது. இதையடுத்து, "புதிய கல்லூரிகள் விண்ணப்பிக்கலாம்" என, சமீபத்தில் ஏ.ஐ.சி.டி.இ. அறிவித்தது.
புதிய பல்கலைகள் மற்றும் கல்லூரிகள், ஏற்கனவே அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் மேலாண்மை தொடர்பான படிப்புகளை துவக்குவது தொடர்பாக ஏ.ஐ.சி.டி.இ. புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், சுப்ரீம் கோர்ட்டின் இரண்டு தீர்ப்புகளை சுட்டிக் காட்டி, மாநில அரசுகளின் உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வித் துறை, தொழில்நுட்ப கல்வி இயக்ககம், அனைத்து பல்கலைகளின் பதிவாளர்கள், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் உள்ள தொழில் நுட்ப கல்லூரிகளில் எம்.பி.ஏ. உள்ளிட்ட மேலாண்மை படிப்புகளை துவக்கினாலோ, புதிய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் தொழில்நுட்ப கல்லூரிகளை துவக்கினாலோ ஏ.ஐ.சி.டி.இ.யிடம் இருந்து முறையான முன் அனுமதி பெற வேண்டும் என அறிவித்துள்ளது.
மேலும், விண்ணப்பம், ஆய்வு உள்ளிட்டவை குறித்த பொது அறிவிப்பு ஒன்றை கடந்த 10ம் தேதி வெளியிட்டுள்ளது. இதன்படி, புதிய தொழில்நுட்ப கல்விநிறுவனம், கல்லூரி ஆகியவற்றிற்கான அனுமதி பெற இம்மாதம் 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். வரும், 19ம் தேதி முதல் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, ஜூன் 3ம் தேதி முதல் அனுமதிக்கான நடவடிக்கைகள் துவக்க படுகிறது.
ஏற்கனவே அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள், அதை நீட்டிப்பதற்கும் 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்கள் 19 முதல் 28ம் தேதிக்குள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும், அறிவித்துள்ளது.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1