பட்டாசு தயாரிப்பு தொழிற்சாலையில் வெடி விபத்து: 6 பேர் பலி!!
உத்தர பிரதேசத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கிய 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்தர பிரதேசத்தின் சுல்தான்பூரில் உள்ள தனியார் பட்டாசு தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் 6 பேர் சிக்கி கொண்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் தீயில் சிக்கியவர்களை மீட்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஏனினும் சிகிச்சை பலனின்றி 6 பேர் உயிரிழந்தனர்.
விபத்திற்கான காரணம் தெரியாத நிலையில், இந்த வழக்கு தொடர்பாக தொழிற்சாலையின் உரிமையாளரை சுல்தான்பூர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Category: மாநில செய்தி
0 comments