பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று கடைசி அமைச்சரவை!!
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலம் நிறைவடையும் நிலையில், இன்று கடைசி அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
16 வது நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், மே 16 ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. இதன் பின்னர் மத்தியில் அமையும் ஆட்சியை முன்னிறுத்தி புதிய அமைச்சரவைக்கான முடிவுகள் வெளியாகும். இந்த நிலையில் தற்போதைய மத்திய அமைச்சரவையின் கடைசி கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று நடைபெற உள்ளது.
தனது கடைசி அமைச்சரவை கூட்டத்தில், மருந்து தயாரிப்பு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது தொடர்பான மசோதாவை பிரதமர் நிறைவேற்ற உள்ளார். இதனை தொடர்ந்து பிரதமர் அலுவலகத்தில் தனது அமைச்சரவையில் பணியாற்றிய மூத்த அதிகாரிகளுக்கு அவர் இன்று பிரவு உபசார விருந்து அளிக்க உள்ளார்.
மன்மோகன் சிங் இந்தியாவின் 13-ஆவது பிரதமராக கடந்த 10 ஆண்டுகாலமாக பதவி வகித்து வருகிறார். அவருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நாளை சிறப்பு விருந்து அளிக்கிறார்.
Category: மாநில செய்தி
0 comments