பொறியியல் சேர்க்கை: இதுவரை 1,81,681 விண்ணப்பங்கள் விற்பனை!!
அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ., பி.டெக். சேர்க்கைக்காக திங்கள்கிழமை வரை 1,81,681 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன.
தமிழகத்தில் பி.இ., பி.டெக். சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த 3-ம் தேதி தொடங்கியது. இதற்காக 2 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் 60 மையங்களில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் 570 பொறியியல் கல்லூரிகள் உள்ள நிலையில் வழக்கம் போலவே இந்தாண்டும் பி.இ., பி.டெக். படிப்பில் சேர மாணவ, மாணவிகள் அதிகளவில் விண்ணப்பங்களை வாங்கி வருகிறார்கள். திங்கட்கிழமை (மே 12) வரை மொத்தம் 1,81,681 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன.
Category: உயர் கல்வி, கல்வி
0 comments