மத்திய அரசு அனுமதித்து 10 மாதங்களாகியும் திருச்சியில் தாமதமாகிவரும் விமான கூரியர்சேவை!!
விமானங்களில் கூரியர் சேவை தொடங்க மத்திய நிதியமைச்சகம் அனுமதியளிõத்து 10 மாதங்கள் ஆன நிலையிலும், அதனை நடைமுறை படுத்த அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதாக கூறி கூரியர் நிறுவன சங்கத்தினர் போராட்டத்தில் குதிக்க முடிவுசெய்துள்ளனர்.
திருச்சி விமான நிலையம் 2012-ம் ஆண்டு முதல் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் சரக்கு போக்கு வரத்து முனையம் 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டாலும் கடநாத பல ஆண்டுகளாக சரக்குகள் அனுப்பட்டு வந்தன. 2011-ம் ஆண்டிலிருந்து படிப்படியாக உயர்ந்து மாதம் சராசரியாக 450 முதல் 500 மெட்ரிக் டன் சரக்குகள் வரைய கையாளப்பட்டு வருகின்றன. சரக்குப்போக்கு வரத்து துவங்கும் முன்னரே விமானங்களில் கூரியர் தபால் போக்கு வரத்துக்கு அனுமதிக்க வேண்டும் என சர்வதேச கூரியர் நிறுவனத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனால் சரக்குப் போக்கு வரத்து தொடங்தி 2- ஆண்டுகள் கழித்துதான் அதற்கு மத்திய நிதியமைச்சகம் அனுமதி அளித்தது. அதன் பின்னர் சுமார் 10 மாதங்கள் ஆன நிலையிலும் கூரியர் போக்கு வரத்துக்கான நடைமுறைகளை விமான நிலையத்தில் அமல்படுத்துவதில் தொடர்ந்து தாமதம் நிலவி வந்தது. விமான நிலைய ஆணையம், சுங்கத்துறை, விமான நிறுவனங்கள் இணைந்து மேற்கொள்ள வேண்டிய இந்த திட்டம் அறிவிப்பாகவே போய்விட்டது.
விமான நிலையத்தில் 2- மாதங்களுக்கு ஒருமுறை சரக்குப்போக்குவரத்து குறித்த ஆலோசனைக்கூட்டம் நடப்பது வழக்கம். இதில் சரக்கு முனைய சுங்கத்துறை அலுவலர்கள், விமான நிலைய ஆணைய அலுவலர்கள், ஏற்றுமதியாளர்கள், வணிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்கேற்று சரக்குப் போக்குவரத்தின் மேம்பாடு குறித்து ஆலோசிப்பர். அவ்வாறு கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்திற்கு சென்னையிலிருந்து சரக்குமுனைய (கார்கோ) பொது மேலாளர் வந்திருந்தார்.
அவரிடம் அடிப்படைத் தேவைகள் குறித்து வைக்கப்பட்ட கோரிக்கைகளுடன், கூரியர் சேவையை விரைவில் தொடங்க ஆவன செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
ஆனால் கார்கோ மேலாளரும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென கூறப்படுகின்றது.இந்த விஷயத்தில் சுங்கத்துறையும், விமான நிலைய ஆணையமும் மாறி மாறி குறை கூறிக்கொண்டு கூரியர் சேவையை செயல்படுத்தவில்லை என்பது கூரியர் நிறுவன இயக்குனர்களின் வருத்தம். எனவே வெள்ளிக்கிழமை திருச்சியில் நடைபெறவிருந்த விமான நிலைய ஆணைய ஆலோசனைக்கூட்டத்தை புறக்கணிக்க் கூரியர் சங்கத்தினர் முடிவு செய்து, அதேபோல கூட்டம் புறக்கணிக்கப்பட்டது குறித்து விமான நிலைய ஆணையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என கூரியர் நிறுவன சங்கத்தினர் தெரிவித்தனர்.
இது குறித்து எக்ஸ்பிரஸ் கூரியர் நிறுவனங்களின் சங்க தென்னிந்திய தலைவர் எஸ்.ஏ. சையது கூறுகையில்,
திருச்சியில் கார்கோ வளர்ச்சி மிகப்பெரிய விமான நிலையங்களை ஒப்பிடும் போது சிறப்பான நிலையில் உள்ளது. அதற்கு விமான நிலைய ஆணையமும், சுங்கத்துறையும் ஒத்துழைத்தால் இன்னும் நன்றாக அமையும். மாதம் செலவுகள் போக சராசரியாக ரூ.8 முதல் 13 லட்சம் வரையில் சர்வதேச கூரியர் சேவை மூலம் விமான நிலையத்துக்கு வருமானம் கிடைக்கும் நிலையுள்ளது.
தவிர ஏற்றுமதி இறக்குமதி துறையில் படித்த சுமார் 25 பேருக்கு (திருச்சியில் மட்டும்) நேரடியாகவும், பலருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும். அன்னியச்செலாவணி வருவாயை அதிகரிக்க வழிசெய்யும் கூரியர் சேவைக்கு திருச்சி விமான நிலையத்தில் கடந்த ஒராண்டாக காத்துள்ளோம். தாமதத்தை கண்டித்துதான் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்தோம். மேலும் தாமதமானால் என்ன நடவடிக்கை எடுப்பது என ஆலோசித்து வருகிறோம் என்றார்.
Category: மாவட்ட செய்தி
0 comments