வேப்பந்தட்டை அருகே 20 பேருக்கு வாந்தி, பேதி!!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே 20 பேருக்கு திங்கள்கிழமை வாந்தி, பேதி ஏற்பட்டது.
வேப்பந்தட்டை அருகேயுள்ள வெண்பாவூர் வடக்குத்தெரு மற்றும் நடுத்தெருவை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோருக்கு திங்கள்கிழமை காலை வாந்தி, பேதி ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து கிருஷ்ணாபுரம் வட்டார அரசு தலைமை மருத்துவ மனையில் செல்வி (35), ராமசாமி (50), பாப்பாத்தி (47), பெரியம்மாள் (45), பார்வதி (44), சங்கர் (46), சின்னம்மாள் (40), குப்பன் (60), ராமர் (40) உள்பட 20 பேர் உள்நோயாளிகளாகச் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.
சுகாதாரமற்ற குடிநீரே இந்தப் பாதிப்புக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
Category: மாநில செய்தி
0 comments