பிளஸ் 2 தேர்வில் 20 பள்ளிகள் 100% தேர்ச்சி!
பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் 20 பள்ளிகள் 100 சதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
அரசுப் பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கூத்தூர், கவுள்பாளையம், களரம்பட்டி ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தேர்வெழுதிய 109 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, 100 சதம் தேர்ச்சியாகும். இதேபோல, பெரம்பலூர் ரோவர் மேல்நிலைப் பள்ளி, தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பனிமலர் மேல்நிலைப் பள்ளி, ஆரூத்ரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, லாடபுரம் எம்.ஆர்.வி. மேல்நிலைப் பள்ளி, பாடாலூர் அன்னை மேல்நிலைப் பள்ளி, அரும்பாவூர் சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சாந்திநிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீ ராகவேந்திரா மேல்நிலைப் பள்ளி, உடும்பியம் ஈடன் கார்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஈடன் கார்டன் மேல்நிலைப் பள்ளி, மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப் பள்ளி, நெற்குணம் ரோவர் மேல்நிலைப் பள்ளி, திருமாந்துறை செயின்ட் ஆண்ட்ரூஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அந்தூர் செயின்ட் பால் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய 17 பள்ளிகளில் தேர்வெழுதிய 2,255 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்படி, மாவட்டத்தில் உள்ள 62 மேல்நிலைப் பள்ளிகளில் 20 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன.
Category: உயர் கல்வி
0 comments