பள்ளிகளில் கூடுதல் கட்டிடங்கள், ஆய்வகங்கள் கட்ட ரூ.1 கோடி நிதி பெரம்பலூர் கலெக்டர் வழங்கினார்
பெரம்பலூர் மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் சார்பில் கூடுதல் வகுப்பறைகள் கட்டிடங்கள் மற்றும் ஆய்வகங் கள் கட்ட ரூ.1 கோடியே 2 லட்சத்து 39 ஆயிரம் மதிப்பிலான காசோலையினை கலெக்டர் தரேஸ் அஹமது பொதுப் பணித் துறை அலுவலரிடம் வழங்கினார்.13 பள்ளிகளுக்கு நிதிகிராமப்புற பள்ளிகளின் மேம்பாட்டிற்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் ஆய்வகங்கள் கட்ட பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 13 பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கப் பட்டுள்ளது.அதனடிப்படையில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் ஒன்றுக்கு ரூ.7 லட்சத்து 53 ஆயிரம் வீதம் குன்னம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, கூடலூர் அரசு உயர்நிலைப் பள்ளி, ஆதனூர் அரசு உயர்நிலைப்பள்ளி, கவுள்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆய்வக கட்டிடங்கள்அதுபோல் ஆய்வக கட்டிடங்கள் ஒன்றுக்கு ரூ. 8 லட்சத்து 3 ஆயிரம் வீதம் காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளி, குன்னம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, பேரளி அரசு மேல்நிலைப் பள்ளி, மருவத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி, நெய்குப்பை அரசு உயர்நிலைப்பள்ளி, வேப்பந் தட்டை அரசு மேல்நிலைப் பள்ளி, ஆதனூர் அரசு உயர்நிலைப்பள்ளி, குரும்ப லு£ர் அரசு மேல்நிலைப் பள்ளி, கல்பாடி அரசு உயர் நிலைப்பள்ளி ஆகிய பள்ளி களுக்கு நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. கலெக்டர் வழங்கினார்இந்த நிதிக்கான காசோலை யினை கலெக்டர் தரேஸ் அஹமது பொதுப் பணித்துறை உதவி செயற்பொறியாளர் என். செல்வராஜிடம் வழங் கினார். அப்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகாலிங்கம், அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட் டத்தின் மாவட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் காம ராசு மற்றும் கல்வி மாவட்ட திட்ட ஒருங் கிணைப்பாளர் அண்ணா துரை, கட்டிட பொறியாளர் தினேஸ் ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.
பெரம்பலூர் மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் சார்பில் கூடுதல் வகுப்பறைகள் கட்டிடங்கள் மற்றும் ஆய்வகங் கள் கட்ட ரூ.1 கோடியே 2 லட்சத்து 39 ஆயிரம் மதிப்பிலான காசோலையினை கலெக்டர் தரேஸ் அஹமது பொதுப் பணித் துறை அலுவலரிடம் வழங்கினார்.
Category: உயர் கல்வி
0 comments