வேப்பந்தட்டை அருகே கிரிக்கெட் விளையாட சென்ற போது பரிதாபம் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி வாலிபர் பலி
கிரிக்கெட் விளையாட சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
கிரிக்கெட் விளையாட
பெரம்பலூர் சங்கு பேட்டையை சேர்ந்த வீரமுத்து மகன் விக்னேஸ்வரன் (வயது 19). இவரது நண்பர் தமிழ் இலவன் (18).
இருவரும் பிளஸ்–2 படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்தனர். நேற்று வீரகனூரில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள் வதற்காக இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை விக்னேஸ்வரன் ஓட்டி சென்றார். தமிழ்இலவன் பின்னால் உட்கார்ந்து சென்றார்.
பஸ் மோதியது
மோட்டார் சைக்கிள் கிருஷ்ணாபுரம் அரிசி குடோன் அருகே சென்றபோது ஆத்தூரில் இருந்து பெரம்ப லூர் நோக்கி ஒரு தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது.
முன்னால் சென்ற ஒரு லாரியை மோட்டார்சைக்கிள் முந்தமுயன்றபோது எதிரே வந்த பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் விக்னேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
படுகாயம்
படுகாயம் அடைந்த தமிழ் இலவன் 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த விபத்து குறித்து அரும்பாவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார் Category: மாவட்ட செய்தி
0 comments