பா.ஜ.க.வின் ஆட்சி நல்லாட்சியாக அமையட்டும்: காதர் மொகிதீன் அறிக்கை!!!!!!!!!111111222
பா.ஜ.க. ஆட்சியில் நற்செயல்களை நாடு எதிர்பார்க்கிறது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூறியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநில தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இந்தியாவில் உள்ள சிறுபான்மையினரில் இஸ்லாமியர்கள்தான் அதிகம். இந்திய வாக்காளர்களில் 20 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள். அவர்களது மனதில் அச்சம், அவநம்பிக்கையை உருவாக்குவதாக பா.ஜ.க.வின் செயல்பாடுகள் உள்ளன.
ராமர் கோயில், பொது சிவில் சட்டம் ஆகிய பிரச்சினைகள் சிறுபான்மையினரின் உணர்வுகளைக் கிளறிவிட்டு எதிர்ப்புத் தீயை வளர்க்கும் முயற்சியே. வெற்றி பெற்றதும் நரேந்திர மோடி, ‘‘அனைத்து மக்களையும் வேறுபாடின்றி அரவணைத்துச் செல்வோம்’’ என கூறியுள்ளார். அந்த பேச்சுக்கேற்ப நற்செயல்களை நாடு எதிர்பார்க்கிறது. பா.ஜ.க.வின் ஆட்சி நல்லாட்சியாக அமையும் என நம்புகிறோம்.
Category: மாநில செய்தி
0 comments