கொலம்பியாவில் பேருந்து விபத்து: 32 குழந்தைகள் உயிரிழப்பு!!
வடக்கு கொலம்பியாவில் பேருந்து ஒன்றில் தீப்பிடித்ததில் 32 குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். பேருந்தில் இருந்த 25-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு கொலம்பியாவில், தலைநகர் பொகோடோவில் இருந்து 850 கி,மீ. தொலைவில் மத விழா ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு 32 குழந்தைகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் ஒரு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தனர். பலியான குழந்தைகள் அனைவருக்கும் ஒன்றில் இருந்து 8 வயது உடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது பேருந்து தீ பிடித்ததில் 32 குழந்தைகள் பலியாகினர். எஞ்சியிருந்தவர்கள் அனைவருக்கும் அதிக அளவில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
பேருந்தில் எரிபொருள் கொண்டு வந்ததே விபத்துக்கு காரணம் என அந்நாட்டின் 'எல் டியம்போ' செய்தித்தாளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: உலக செய்தி
0 comments