ஹஜ் ஒப்பந்தத்தில் இந்தியா-சவூதி கையெழுத்து!
இந்தியாவில் உள்ள புனித பயணிகளின் 2014-ஆம் ஆண்டிற்கான ஹஜ் கடமை தொடர்பான பிரிவுகள் அடங்கிய ‘ஹஜ் -1435’ என்ற ஒப்பந்தத்தில் இந்தியாவும், சவூதி அரேபியாவும் கையெழுத்திட்டன.
சவூதி அரேபியாவின் ஹஜ் அமைச்சர் பந்தர் பின் ஹஜ்ஜாரின் ஜித்தா அலுவலகத்தில் வைத்து இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் இ.அஹ்மத் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
ஹஜ் ஒதுக்கீடு, தங்குமிடம்-பயண வசதிகள், இந்தியாவில் இருந்து முதல் ஹஜ் புனித பயணிகள் குழு சென்றடையும் தேதி, திரும்பி வருதல் உள்ளிட்ட காரியங்கள் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதுத்தொடர்பாக விரிவாக கூறப்படவில்லை.இன்று ஜித்தா இந்திய துணை தூதரகத்தில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.இந்தியாவில் இருந்து இவ்வாண்டு 1,36,000 பேருக்கு புனித ஹஜ் செல்ல வாய்ப்பு கிடைக்கும். இரு நாட்டு அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.
Category: வளைகுட செய்தி
0 comments