முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ திட்டத்தில் மருத்துவ சிகிச்சை பெரம்பலூர் கலெக்டர் தகவல்!
பெரம்பலூர்,
முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத் தின் மூலம் இதுவரை 7 ஆயிரத்து 351 பேருக்கு ரூ.17 கோடியே 13 லட்சத்து 43 ஆயிரத்து 650 மதிப்பிலான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர். தரேஸ் அஹமது தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறி இருப்பதாவது :-
மருத்துவ காப்பீடு திட்டம்.
தமிழகத்தின் ஏழை குடும்பங் கள் கட்டணம் இல்லாத சுகாதாரமிக்க சிறந்த மருத்துவ சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளை அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகள் மூலமாக செய்து கொள்ள அறிமுகம்படுத்தப்பட்ட திட்டம்தான் முதல்-அமைச் சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட மாகும்.
இத்திட்டத்தின் கீழ் 1,016 விதமான நோய்களுக்கு மருத்துவ சிகிச்சையும், 23 வகையான பரிசோதனை களும், 133 வகையான நோய் களுக்கு தொடர் சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.
5 வயதுக்குட்பட்ட 30 குழந்தைகளுக்கு தலா ரூ.9 லட்சம் மதி¢ப்பிலான செயற்கை காதொலிகருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத் தின் மூலம் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை பொது மருத்துவ மனைக்கு கிடைத்த ரூ.1.5 கோடி நிதி நோயாளிகளின் நலனுக் காகவும், மருத்துவமனை வளர்ச்சிக்காகவும் பயன் படுத்தப்பட்டு வருகிறது.
ரூ.17 கோடி
பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 7351 நபர்களுக்கு 32 வகையான நோய்களுக்கு ரூ.17 கோடியே 13 லட்சத்து 43 ஆயிரத்து 650 மதிப்பிலான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள் ளது.
அடையாள அட்டை
இதுவரை பெரம்பலூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 430 நபர்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்திற்கான அடையாள அட்டை வழங்கப் பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை அடையாள அட்டை பெறாத நபர்கள் தனது குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72ஆயிரத் துக்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில் அதற்கான சான்றினை கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று மாவட்ட கலெக்டர் வளாக தரை தளத்தில் அமைந்துள்ள முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அலுவலகத்தில் சமர்ப்¢பித்து உடனடியாக அடையாள அட்டை பெற்றுக்கொள்ள லாம்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
Category: மாவட்ட செய்தி
0 comments