பெரம்பலூர் வழியாக சேலம் வரை புதிய ரெயில் பாதை அமைக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!
பெரம்பலூர், பிப்.7-
அரியலூரில் இருந்து பெரம்பலூர் வழியாக சேலம் வரை புதிய ரெயில் பாதை அமைத்து ரெயில் விடக்கோரி விவசாயிகள் பெரம்பலூரில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட் டனர்.
ஆர்ப்பாட்டம்
பெரம்பலூரில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் உழவர் தலைவர் நாராயண சாமி நாயுடு 90-வது பிறந்த தினத்தை முன்னிட்டு மத்திய அரசை வலியுறுத்தி கோரிக்கை ஊர்வலம், ஆர்ப்பாட்டம் மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் தலைமையில் நடந்தது.
மத்திய அரசின் வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையத்தை தன்னாட்சி கொண்ட அமைப்பாக மத்திய அரசு செயல்படுத்திட வேண் டும். நெல், பருத்தி, மக்காச் சோளம், கடலை, எள் போன்ற அனைத்து விவசாய விளை பொருட்களுக்கு நியாயமான விலையை அரசு நிர்ணயித்து அறிவிக்க வேண்டும்.
ஊர்வலம்
இடைத்தரகர்கள் கொள்ளை லாபம் அடித்து வருவதை தடுத்திட விவ சாயிகள், வியாபாரிகள், அரசு அதிகாரிகள் கொண்ட முத் தரப்பு கூட்டத்தை கூட்டி வெங்காயத்திற்கு விலை நிர் ணயிக்க வேண்டு¢ம். திருத்தி அமைக்கப்பட்ட தேசிய வேளாண் காப்பீடு திட்டத்தை தனிநபர் பயிர் காப்பீடு திட்ட மாக மத்திய அரசு செயல் படுத்திட வேண்டும்.
விருத்தாசலம், அரியலூர், பெரம்பலூர், ஆத்தூர் வழி யாக சேலம் வரை புதிய ரெயில் தடம் ஏற்படுத்தி ரெயில்கள் விடுமாறு மத்திய அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரோவர் நூற் றாண்டு வளைவில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை அரியலூர் மாவட்டதலைவர் நமங்குனம் அன்பழகன் தொடங்கி வைத்தார்.
கலெக்டரிடம் மனு
பெரம்பலூர் மாவட்ட தலைவர் மாணிக்கம் தலைமை வகித்தார். ஊர்வலம் வெங்க டேசபுரம், பாலக்கரை வழி யாக சென்று புறநகர் பஸ்நிலை யத்தை அடைந்தது. அங்கு உழவர் தலைவர் நாராயண சாமி நாயுடு சிலைக்கு விவசாயி கள் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தி, ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.
ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் நீலகண்டன், பொருளாளர் மணி, இளைஞர் அணி செயலாளர் பெரியசாமி, வட்டார தலைவர்கள் துரை சாமி, ராஜேந்திரன், சீனி வாசன், எம்.எஸ்.ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண் டனர். இதனை தொடர்ந்து கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
Category: மாவட்ட செய்தி
0 comments