லப்பைக்குடிக்காடு அருகில் உள்ள திருமாந்துறையில் விவசாயி அடித்துக்கொலை!
லப்பைக்குடிக்காடு அருகில் உள்ள திருமாந்துறையில் விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
விவசாயி
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள திருமாந்துறை கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது50). இவருக்கு சொந்தமான நிலம் அதே ஊரில் வாகன கட்டண வசூல் மையம் அருகே உள்ளது. இங்கு முருகன் மாட்டு கொட்டகை அமைத்து 10 மாடுகளை வைத்து வளர்த்து வந்தார். நேற்று அதிகாலை முருகன் அங்கு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதிகாலை 4 மணி அளவில் குன்னம் அருகே உள்ள கல்லம் கிராமத்தை சேர்ந்த விவசாயி பரமசிவம் (வயது 38) முருகனை எழுப்பி தண்ணீர் கேட்டார்.
அடித்துக்கொலை
தண்ணீர் எடுக்க சென்ற முருகனை பின்னால் சென்று பரமசிவம் உருட்டுக்கட்டை யால் தலையில் பலமாக தாக்கி னார். அப்போது முருகன் தன் உயிரை காப்பாற்றி கொள்ள பரமசிவத்தை திருப்பி உருட்டு கட்டையால் தாக்கினார். இதில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டதில் பரமசிவம் அங்கு இருந்த தகர கொட்டைகையின் மீது விழுந்து அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்து விட் டார்.
போலீஸ் விசாரணை
இது குறித்து திருமாந்துறை கிராம நிர்வாக அலுவலர் மனோகரன் கொடுத்த புகாரின் பேரில் மங்கலமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் பெரம்பலூர் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பெரம்பலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுருளியாண்டி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
காரணம் என்ன?
மேலும் மங்கலமேடு போலீ சார் பரமசிவம் உடலை கைப் பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். தலையில் பலத்த காயம் அடைந்த முருகன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மங்கலமேடு போலீசார் பரமசிவத்தை அடித்துக்கொலை செய்த முருகனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Category: மாவட்ட செய்தி
0 comments