நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: இன்றும், நாளையும் நடக்கிறது!
புதுடெல்லி, பிப்.10-
நாடு முழுவதும் உள்ள 27 பொதுத்துறை வங்கிகளின் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகளில் சுமார் 8 லட்சம் ஊழியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இந்த ஊழியர்களின் சம்பள விகிதம் கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்குப்பின் திருத்தப்படவில்லை.
எனவே சம்பள விகிதத்தை திருத்தி 10 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என வங்கி ஊழியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பாக அரசுடன் கடந்த டிசம்பர் மாதம் 14-ந்தேதி நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து அந்த மாதம் 18-ந்தேதி வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 6-ந்தேதி வங்கி தொழிற்சங்க கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன், தலைமை தொழில்துறை ஆணையர் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையிலும் எந்தவித முடிவும் எட்டப்படாததால், நாடு முழுவதும் 10 (இன்று) மற்றும் 11-ந்தேதிகளில் வேலைநிறுத்தம் செய்ய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை வங்கி ஊழியர்களும் இன்றும், நாளையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதில் அனைத்திந்திய ஸ்டேட் வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு, அனைத்திந்திய பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் கூட்டமைப்பு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் பங்கு பெறும் என பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.
எனினும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, எச்.டி.எப்.சி. வங்கி, ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட தனியார் துறை வங்கிகள் அனைத்தும் வழக்கம் போல செயல்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் நாடு முழுவதும் வங்கி சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஏ.டி.எம். சேவையும் பாதிக்கப்படும் என தெரிகிறது.

Category: மாநில செய்தி
0 comments