அதிக விலைக்கு மருந்துகளை விற்றால் கடும் நடவடிக்கை: விலை நிர்ணய ஆணைய தலைவர் எச்சரிக்கை!
சென்னை, பிப்.2
மருந்துப் பொருட்களை அரசு நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத் தலைவர் சிங் எச்சரித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சிங் மேலும் கூறுகையில், “அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மற்றும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 348 மருந்துகள் அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் உள்ளது. இந்த உத்தரவை மீறும் நிறுவனங்கள் மற்றும் கடைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வகையில், கடந்த ஆண்டு மட்டும் மருந்து நிறுவனங்களிடம் இருந்து ரூ.3200 கோடி அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது” என்றார்.

Category: மாநில செய்தி
0 comments