புற்றுநோய் வராமல் தடுக்கலாம்! (உலக புற்றுநோய் விழிப்பு உணர்வு தினம் பிப்ரவரி 4)
உலக புற்றுநோய் விழிப்பு உணர்வு தினம் பிப்ரவரி 4
''சினிமா தியேட்டரில், 'என் பெயர் முகேஷ்... எனக்கு வாய்ப் புற்றுநோய்’ என்று ஆரம்பித்து, அவருக்கு வயது 24, முகேஷ் தற்போது உயிருடன் இல்லை, என்று முடியும் விளம்பரத்தைப் பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கும். இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் இருக்கிற முகேஷ் போன்றோர்க்குத்தான் இதுபோன்ற வியாதிகள் வரும். நம் ஊரில் எல்லாம் இந்த அளவுக்குப் பிரச்னை இல்லை என்று பலரும் அந்த விளம்பரத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை. ஆனால், தமிழகத்திலும் வாய்ப் புற்றுநோய் அதிகமாக இருக்கிறது என்பதுதான் அதிர்ச்சி'' என்கிறார் மதுரையைச் சேர்ந்த முகம் மற்றும் தாடை, பல் சீரமைப்பு மருத்துவர் கண்ணபெருமான்.
'உலக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தும் புற்றுநோயாக முதல் இடத்தில் மார்பகப் புற்றுநோய் இருக்கிறது. புகையிலைப் பொருட்களால் ஏற்படக்கூடிய புற்றுநோய், ஆண்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. புகைபிடிப்பது, பான் மசாலா, புகையிலை மெல்லுவது போன்ற செயல்களால், 10-ல் நான்கு பேருக்கு வாய்ப் புற்றுநோய் ஏற்படுகிறது. இந்தப் புற்றுநோயால் 42 சதவிகித ஆண்களும், 18 சதவிகிதப் பெண்களும் உயிரிழக்கின்றனர்.
சமீபத்தில் பொறியியல் படிக்கும் மாணவர் ஒருவர், என்னிடம் பல் வலி என்று வந்தார். பரிசோதித்ததில், அவருக்கு வாய்ப் புற்றுநோய் இருந்தது. நான்கு ஆண்டுகளாக அவருக்கு, புகைபிடிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. சிலர், 'நான் ரொம்ப வருஷமா சிகரெட் பிடிக்கிறேன்... எனக்கு எந்த வியாதியும் இல்லை’ என்று பெருமையாகச் சொல்லுவார்கள். புற்று நோய் என்பது எப்போதும் வரலாம். புகைக்கும் அளவையும், பான் போடும் அளவையும், நம்முடைய நோய் எதிர்ப்பு ஆற்றலையும் பொருத்துதான் நோய் வருவதற்கான வாய்ப்பு அமையும்' என்றவர், வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்கான வழிகளைச் சொன்னார்.
- சண்.சரவணக்குமார், படம்: பா.காளிமுத்து
புற்றுநோய்... பீதி வேண்டாம்!
''எந்த ஓர் அறிகுறியுமின்றிப் புற்றுநோய் தாக்கும், புற்றுநோயை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது'' என்பது போன்ற தவறான நம்பிக்கைகள் மக்கள் மத்தியில் நிலவுகின்றன. இவற்றைக் களைந்து, புற்றுநோய் தொடர்பான விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்த ஆண்டு, புற்றுநோய் தினம் திட்டமிடப்பட்டுள்ளது.
கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிற்கு, சமீபத்தில் வழங்கப்பட்ட பத்மபூஷண் அவார்டு அவரது கேரியருக்கான விருது என்று பலர் நினைத்தாலும் கேன்சர் என்னும் கொடிய அரக்கனிடம் இருந்து மீண்டு ஆட வந்த அவரது தன்னம்பிக்கைக்காகத் தான் அவ்விருது. பலரை வாட்டி எடுக்கும் புற்றுநோயால் உலகம் முழுவதும் 1 கோடி பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சமீபத்திய ஆய்வுப்படி இந்தியாவில் பத்து நிமிடத்திற்கு ஒரு பெண் மார்பக புற்று நோய்க்கும், ஏழு நிமிடத்திற்கு ஒரு பெண் கருப்பை வாய் புற்றுநோய்க்கும் இறப்பதாக தெரிகிறது. காரணம் கேன்சர் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே இல்லை. பிப்ரவரி 4ந்தேதி உலக கேன்சர் தினம். கேன்சர் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட வேண்டியது அவசியம் என்பதை உணர்த்தும் நாள்.
கேன்சர் என்பது...
நம் உடலில் செல்களின் வளர்ச்சி மற்றும் இறப்பினை கட்டுபடுத்தும் மரபிகளில் ஏற்படும் மாற்றத்தால் புற்றுநோய் ஏற்படுகிறது. உடலுக்கு தேவையற்ற பல புதிய செல்கள் தோன்றினாலும், பழைய வயதான செல்கள் இறக்காமல் இருந்தாலும் நமது உடலில் அதிகப்படியான தேவையற்ற செல்கள் இருக்கும். இவை ஒன்றாக இணைந்து ஒரு கழலை (ட்யூமர்) என்னும் திசுக்கூட்டமாகும். பெரும்பாலானவை தீங்கில்லா கழலைகள் தான். அவற்றால் உடலுக்கு ஏதும் பாதிப்புகள் இல்லை, அவற்றை அறுவை சிகிச்சை மூலம் நீக்கிவிடலாம். ஆனால், ஒரு சில கழலைகள் தீங்கானவை. அவற்றின் செல்கள்தான் புற்றுநோய் செல்களாக மாறுகின்றன.புகைப்பழக்கமும், கொழுப்புச்சத்து மிகுந்த உணவுகளும் புற்றுநோய்க்கான மிக முக்கிய காரணிகள். பரம்பரையில் யாருக்கேனும் புற்றநோய் இருந்தால் அவர்களது சந்ததியினருக்கும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
எத்தனை வகை கேன்சர்?
லூகிமியா (ரத்தப் புற்றுநோய்), மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், கருப்பை புற்றுநோய், தோல் புற்றுநோய், சிறுநீரகப் புற்றுநோய், செர்விகல் புற்றுநோய் என பல வகை புற்றுநோய்கள் உண்டு.
பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்கள்
பெண்களுக்கு மார்பக மற்றும் கர்ப்பப்பை சார்ந்த புற்று நோய்கள் பெரும்பாலும் ஏற்படுகின்றன.இருபது வயதுக்கு மேல் எல்லா பெண்களும் மார்பு சுய பரிசோதனை செய்வதும் 35 வயதுக்கு மேல், ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவமனையில் மார்பக பரிசோதனை செய்வதும் அவசியம். அதுபோல 30 வயதை தாண்டிய பெண்கள், ஆண்டுக்கு ஒரு முறை கருப்பை வாய் புற்று நோய்க்கான பரிசோதனையும் (பாப்ஸ்மியர் டெஸ்ட்) செய்துகொள்ள வேண்டும். பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோயை ஆரம்பகட்டத்தில் கண்டுபிடித்தால் குணப்படுத்திவிடலாம்.
கட்டுப்படுத்த...
புற்றுநோயைக் கட்டுப்படுத்த முதல் சிகிச்சை நோயாளிகளுக்கு மனஉறுதி அளிப்பது தான். புற்றுநோய் சிகிச்சைகளை, ஏற்றுக்கொள்ள பாதிக்கப்பட்டவர் உடலளவிலும், மனதளவிலும் தயாராக அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் அவர்களுக்கு தைரியத்தையும், நம்பிக்கையும் தரும் வகையில் மிக இயல்பாக இருந்தாலே போதும்.
சிகிச்சைகள்...
அறுவைசிகிச்சை, கீமோதெரபி, ரேடியேஷன் தெரபி இவையெல்லாம் புற்றுநோய்க்கான முக்கிய சிகிச்சைகள். சரியான முறையில் மருத்துவம் பார்த்து, முறையான உணவுகளும், மருந்துகளும் எடுத்து கொண்டால் புற்றுநோயை எளிதில் வெல்ல முடியும். இருந்தபோதும் இந்த கடுமையான காலகட்டத்தை இவர்கள் தாண்ட செல்லபிராணிகள் வளர்த்தல் போன்ற உயிரோட்டமுள்ள ஒரு பொழுதுபோக்கு இவர்களுக்கு அத்தியாவசியம். இது இவர்களின் மன நிலையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவருவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றன.
சர்வதேச ரோஸ் தினம்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் நலனுக்கான ஆண்டுதோறும் செப்டம்பர் தேதி 22 சர்வதேச ரோஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களை நாம் எப்படி அணுகுவது என்பதைச் சொல்லும் தினம். 1994ல் கனடாவைச் சேர்ந்த மெலின்டா ரோஸ் என்கிற சிறுமி, குணப்படுத்த முடியாத ஒரு அரியவகை ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டாள். ஓரிரு வாரங்கள்தான் மெலின்டா ரோஸ் உயிரோடு இருப்பாள் என அவளைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்த போதும் தனது தளராத மன உறுதியினால் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேல் உயிரோடு இருந்த ரோஸ், கடுமையாக நோய் தாக்கியிருந்த போதிலும், கொஞ்சம் கூட உற்சாகம் இழக்காமல் தனது ஒவ்வொரு நாளையும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் செலவழித்தாள். அவர்களை உற்சாகப்படுத்தினாள். தனது இறுதி மூச்சுவரை, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களது மனதில் மகிழ்ச்சி தோன்றுமாறு செயல்கள் செய்த சிறுமி ரோஸின் நினைவாகத்தான், அவள் இறந்த தினமான செப்டம்பர் 22ம் தேதி ரோஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது.புற்று நோயை பாதித்தோருக்கும் நம்மைப் போல் இயல்பான வாழ்க்கை அமைத்துத்தருவது நம் கையில் தான் இருக்கிறது!
கேன்சருக்கான அறிகுறிகள்
*திடீரென ஏற்படும் அதீத எடை குறைவு, பசியின்மை.
*திடீரென தென்படும் கட்டிகள். திடீர் பார்வை குறைபாடு, தொடர் இருமல் ரத்தத்தோட வெளியேறும் சளி
*மலம் அல்லது சிறுநீர் கழிக்கும் பழக்கத்தில் மாறுதல்.தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு.
*ஆறாத புண்.
*அசாதாரணமான இரத்த போக்கு அல்லது திரவம் வடிதல். பெண் உறுப்பில் மாதவிடாய் நின்றபிறகு இரத்தம் அல்லது திரவம் கசிதல்.
*உணவினை விழுங்குவதில் சிரமம்.
*ஒரு மச்சம், கரனை அல்லது வாய்புண்ணில் திடீரென ஏற்படும் மாற்றம்.
*தொடர்ச்சியான தலைவலி, விடியற்காலையில் அதிக அளவு தலைவலி (இத்துடன் வாந்தி, வலிப்பு, மயக் கம்) மற்ற பாகங்களிலும் காரணமற்ற வலி நிவாரணிகளுக்கு கட்டுப்படாத வலி.
*தொடர் ஜுரம், குமட்டல், வாந்தி மற்றும் சோர்வடைதல்.
*திரும்ப திரும்ப காரணம் இன்றி ஏற்படும் நோய் தொற்று.
*குழந்தைகளின் கண்கள் இருட்டில் பூனை கண்போல மின்னுதல்.
*எந்த காரணமும் இன்றி அதிகபடியான இரத்த சோகை மற்றும் தோலில் ஏற்படும் சின்ன
புற்றுநோயாளிகளுக்கு தலைமுடி தானம் செய்ய வாங்க
நமது நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இப்படி பல்வேறு புற்றுநோயால் பதிக்கப்பட்டவர்கள் அதனை கட்டுப்படுத்தி குணமாக்கும் வகையில் கிமோதெரப்பி சிகிச்சை பெறுவது வழக்கம்.இந்த வகை சிகிச்சை பெறுபவர்கள் தங்களில் தலைமுடி பாதிக்கப்படுவதோடு நாளாக நாளாக அவை வலுவிழந்து கொட்டிவிடும். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு செயற்கை தலைமுடி (விக்) அளிக்கப்படும்.இதற்காக, கிரீன் டிரன்ட்ஸ் மற்றும் ஸ்டைல் சலூன் உதவியுடன் பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியின் ரொட்டராக்ட் குழு, டாங்கில்டு என்ற தலைமுடி தானம் செய்யும் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
விருப்பப்படுவோர் தங்களது முடியின் ஒரு பகுதியை தானம் செய்யலாம். 10 நாட்கள் நடக்கும் இந்த முடி தானம் நிகழ்ச்சி உலக புற்றுநோய் தினமான வரும் 4ம் தேதி நுங்கம்பாக்கத்தில் உள்ள பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியில் தொடங்குகிறது.இதில், விருப்பமுள்ளவர்கள் தங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள கிரீன் டிரன்ட்ஸ் மற்றும் ஸ்டைல் சலூன் அழகு நிலையங்களில் தலைமுடியை தானம் செய்யலாம். தானமாக பெறப்பட்ட தலைமுடிகள் பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியின் ரொட்டராக்ட் குழு (ஆர்சி-டபூல்யூ.சி.சி)விடம் ஒப்படைக்கப்படும்.என்னங்க நீங்களும் தலைமுடி தானம் செய்ய தயாரா? உங்கள் சந்தேகங்களுக்கு இந்த எண்ணை அழைங்க: 1800 420 20 20
Category: மருத்துவம்
0 comments