பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்2 செய்முறைத்தேர்வு. வி.களத்தூர் உள்பட 52 மையங்கள் தயார்!!
பெரம்பலூர், பிப். 6:
பிளஸ்2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் பெரம்பலூர் மாவட்டத்தில் முதல்சுற்றில் 27மையங்களிலும், இரண்டாவது சுற்றில் 25மையங்களிலும் என 52மையங்களில் நடக்கின்றன.
பிளஸ்2 பொதுத்தேர்வு மார்ச் 3ம்தேதி தொடங்க உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள மேல்நிலைப்பள்ளிகளில் 34அரசுப்பள்ளிகள், ஒரு ஆதிதிராவிடர் நலப்பள்ளி, 8மெட்ரிக் பள்ளிகள், 15சுயநிதிப்பள்ளிகள், 4அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் 62பள்ளிகளை சேர்ந்த 7,570பேர், 23தேர்வு மையங்களில் பிளஸ்2 பொதுத்தேர்வு எழுத உள்ளனர்.
இந்நிலையில் செய்முறைத் தேர்வு (பிராக்டிக்கல்) பெரம்பலூர் மாவட்டத்தில் 2சுற்றுகளாக நடைபெறுகின்றன. அதன்படி முதல் சுற்றில் 27செய்முறை தேர்வுமையங்களில் பிப்ரவரி 10ம்தேதி தொடங்கி 14ம்தேதி வரை கூத்தூர், லெப்பைகுடிகாடு(பெ), லெப்பைகுடிகாடு(ஆ), மேலப்புலியூர், செட்டிக்குளம், அரும் பாவூர், காரை, பேரளி, கவுள்பாளையம், குன்னம்(பெ), பூலாம்பாடி, வெங்கலம், கொளக்காநத்தம், ஒகளூர், குரும்பலூர், பெரம்பலூர், பசும்பலூர்ஆகிய அரசுப்பள்ளிகள், புனித ஆண்ட் ரூஸ் மெட்ரிக், அரும்பாவூர் ராகவேந்திரா, சாந்திநிகேதன், சுவாமி விவேகானந்தா, ஆருத்யா வித்யாலயா மெட்ரிக், அன்னமங்கலம் சிறுமலர், பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக், மவுலானா, மேலமாத்தூர் ராஜவிக்னேஷ், அம்மாபாளையம் எம் ஆர்வீ, உடும்பியம் ஈடன்கார்டன், ஈடன்கார்டன் மெட்ரிக், அகரம்சீகூர் சிறுமலர், பெரம்பலூர் பனிமலர், நெற்குணம் ரோவர், புனித தோமினிக் பெண்கள் ஆகிய மேல் நிலைப் பள்ளிகளுக்கு செய்முறைத் தேர்வுகள் நடத்தப்படுகிறது.
இரண்டாவது சுற்றில் 25செய்முறைத் தேர்வு மையங்களில் பிப்ரவரி 17ம்தேதி தொடங்கி 21ம்தேதி வரை குன்னம்(ஆ), சிறுவாச்சூர், நெற்குணம், எசனை, பாடாலூர், வாலிகண்டபுரம், அனுக்கூர், வேப்பந்தட்டை, கீழப்புலியூர், அம்மாப்பாளையம், வி.களத்தூர், துங்கபுரம், எஸ்.ஆடுதுறை, மருவத்தூர், கீழப்பெரம்பலூர், வேப்பூர், கை.க ளத்தூர், களரம்பட்டி(ஏடி) ஆகியஅரசுபள்ளிகள், அந்தூர் செயின்பால்ஸ் மெட்ரிக், பாடாலூர் அன்னை, அகரம் தூயமேரி, பெரம்பலூர் ராமகிருஷ்ணா மெட்ரிக், ஸ்ரீசாரதா தேவி, புனிதஜோசப் மெட்ரிக், தனலட்சுமி சீனிவாசன், ஒதியம் வான்புகழ் வள்ளுவர், துறைமங்கலம் அன்னை ஈவாமேரிகோக்(பெ), தந்தைரோவர் ஆகிய மேல்நிலைப் பள்ளிகளுக்கும் எனமொத்தம் பெரம்பலூர் மாவட்டத்தில் 62 மேல்நிலைப் பள்ளிகளைச்சேர்ந்த மாணவ, மாணவியருக்கு 52மையங்களில் செய்முறைத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
இந்த செய்முறைத் தேர்வுகளில், இயற்பியல், வேதியியல் பாடங்களை சேர்ந்த தலா 6047பேர்களும், தாவரவியல், விலங்கியல் பாடங்களை சேர்ந்த தலா 842பேரும், உயிரி தாவரவியல், உயிரி விலங்கியல் பாடங்களை சேர்ந்த தலா 3592பேரும், கணினி அறிவியல் பாடத்தில் 2400பேரும், கணக்குப் பதிவியலும் தணிக்கையியலும் என்ற பாடத்தில் 314பேர்களும், இஎம்ஏ பாடத்தில் 149பேரும், வேளாண் செய்முறைகள் பாடத்தில் 114பேரும், நர்சிங் பாடத்தில் 25பேரும், ஆடை வடிவமைப்புப் பயிற்சி, மனையியல் பாடங்களில் தலா 29பேரும் செய்முறைத் தேர்வில் பங்கேற்க உள்ளனர்.
Category: மாணவர் பகுதி, மாவட்ட செய்தி
0 comments