பெரம்பலூர் மாவட்டத்துக்கு குற்ற வழக்குகளில் துப்பறிய புதிய மோப்ப நாய்!
பெரம்பலூர், ஜன. 7:
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் துப்பறியும் படை பிரிவில் ரோஸி என்னும் புதிய மோப்ப நாய் சேர்க்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் துப்பறிய உதவும் வகையில் ராபின், ஜீட்டா ஆகிய மோப்ப நாய்களும், வெடிகுண்டு உள்ளிட்ட பொருட்களை கண்டறிய உதவும் வகையில் ஜூலி, நிக்கி ஆகிய மோப்ப நாய்களும் செயல்பட்டு வந்தன. இதனிடையே, நிக்கிக்குப் பதிலாக கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் லேப்ரடார் இனத்தை சேர்ந்த ரோஸி என்ற புதிய நாய் ஒன்று வாங்கப்பட்டு 6 மாதம் பெரம்பலூரிலும், இதைத் தொடர்ந்து சென்னையில் 6 மாதமும் வெடிகுண்டு உள்ளிட்ட வெடிப் பொருட்களை கண்டறிவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சி முடிந்து நேற்று பெரம்பலூர் எஸ்பி அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்ட ரோஸியை எஸ்பி சோனல் சந்திரா நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், சிறப்பு பயிற்சி முடித்துள்ள இந்த மோப்ப நாய் பெரம்பலூர் மாவட்ட துப்பறியும் பிரிவில் சோக்கப்பட்டு இன்று முதல் பணியில் ஈடுபடுத்தப்படுகிறது என்றார்.
Category: மாவட்ட செய்தி
0 comments