பெரம்பலூரில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை அலுவலகம் கலெக்டர் திறந்து வைத்தார்!
பெரம்பலூர், ஜன.5-
பெரம்பலூரில் குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை அலுவலகத்தை கலெக்டர் திறந்து வைத் தார்.
குற்ற புலனாய்வு அலுவலகம்
தமிழக முதல்வரின் ஆணையின்படி பெரம்பலூர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை அலுவலகத்தை கலெக்டர் தரேஸ் அஹமது தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர் கலெக்டர் செய்தியாளர்களிடம் பேசிய தாவது:
பெரம்பலூர் மாவட்டத்தின் முன்னேற்றத்தையும், வளர்ச் சியையும் கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் பெரம்பலூர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை அலுவலகம் தொடங்கப் படும் என்று தமிழக முதலமைச் சர் அவர்கள் அறிவித்திருந் தார்
அதன் அடிப்படையில் 5 முதல் நிலைகாவலர்களும், ஒரு உதவி ஆய்வாளர் ஆகி யோர் கொண்டு .இந்த அலு வலகம் செயல்படும்.
தடுப்பு காவல் சட்டம்
மேலும் பெரம்பலூர் மாவட்ட அலுவலகம் மதுரை மண்டலத்தின் கீழ் இயங்கும், மதுரை மண்டலத்தில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையி னரால் நடப்பு ஆண்டில் இதுவரை 4 ஆயிரத்து 640 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.29 லட்சத்து 66 ஆயிரத்து 815.00 மதிப்புள்ள பொது வினியோகத் திட்ட அரிசி 5 ஆயிரத்து251 குவிண்டால், ரூ.4 லட்சத்து 40 ஆயிரத்து 250.00 மதிப்புள்ள பொது வினியோகத் திட்ட மண் எண்ணெய் 29 ஆயிரத்து 350 லிட்டர், ரூ.19 லட்சத்து 95 ஆயிரத்து 300 மதிப்புள்ள 2 ஆயிரத்து 217 அரசு மானிய விலை எரிவாயு சிலிண்டர்கள் முறைகேடாக பயன்படுத்தப் பட்டது. இவைகள் கைப்பற்றப் பட்டு மேற்படி முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 2 ஆயிரத்து 850 நபர்கள் கைது செய்யப்பட்டும், 56 நபர்கள் கள்ளச்சந்தை தடுப்புச் சட் டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப் பட்டுள்ளனர்.
மேலும் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக நடப்பு ஆண்டில் இதுவரை ரூ.2 கோடியே 26 லட்சத்து 88 ஆயிரத்து 4 மதிப்புள்ள 397 வாகனங்கள் கைப்பற்றப் பட்டுள்ளது.
சமீபத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு வாகனங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவல ரால் மொத்தம் ரூ.4 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் 57 வழக்குகள் பதியப்பட்டு 37 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். அவர் களிடமிருந்து 73.5 குவிண்டால் அரிசியும், 60 லிட்டர் மண் எண்ணெயும் 21 சிலிண்டர் களும் பறிமுதல் செய்யப்பட் டுள்ளது.
மேலும் பெரம்பலூர் மாவட் டத்திற்கு தனி அலுவலகம் திறக்க பட்டதன் மூலம் குற்ற செயல்கள் மேலும் குறையும்.
இவ்வாறு அவர் தெரிவித் தார்.
இந்நிகழ்ச்சியில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையின் மதுரை மண்டலகாவல் கண் காணிப்பாளர் சாமிநாதன,¢ மாவட்ட காவல் கண்காணிப் பாளர் சோனல் சந்திரா, குற்றப்புலனாய்வுத் துறையின் திருச்சிராப்பள்ளி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பா ளர் சீனிவாசன் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Category: மாவட்ட செய்தி
0 comments