சென்னையில் இருந்து புறப்பட்ட AIR INDIA விமானத்தில் இயந்திர கோளாறு 271 பேர் தப்பினர்!
சென்னை: சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா விமானம் நேற்று மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு சென்றது. விமானத்தில் 266 பயணிகள், 5 சிப்பந்திகள் இருந்தனர். விமானம் நடுவானில் பறந்தபோது, விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதை உடனடியாக கண்டு பிடித்த விமானி, அவசரமாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்தார். இதை தொடர்ந்து இரவு 7 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
பயணிகள் அனைவரும் சென்னையில் பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். இவர்கள் மாற்று விமானத்தில் இன்று காலை சிங்கப்பூர் செல்வார்கள் என அறிவிக்கப்பட்டது. உரிய நேரத்தில் விமானத்தில் கோளாறை கண்டுபிடித்து எடுத்த நடவடிக்கையால் 271 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Category: மாநில செய்தி
0 comments