ஐஓபி கனெக்ட் டெபிட் கார்டு அறிமுகம்!
சென்னை: இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் தனது அடுத்த தலைமுறை வாடிக்கையாளர்களுக்காக, 'ஐஓபி கனெக்ட்' என்ற புதிய டெபிட் கார்டை பிரத்யேகமாக அறிமுகம் செய்துள்ளது. 10 வயது முதல் 28 வயது வரையிலான இளைஞர்கள் இந்த வசதியை பெற்றுக் கொள்ளலாம். விசா நிறுவனத்துடன் இணைந்து இந்த ஐஓபி கனெக்ட் டெபிட் கார்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கார்டு 2 பிரிவுகளாக பிரித்து ஒன்று சிறுவர், இளைஞர்களுக்கும் ம் மற்றொன்று சிறுமிகள் மற்றும் இளம்பெண்களுக்கும் வழங்கப்படும். புதிய கார்டு வழங்க கட்டணமோ அல்லது ஆண்டு கட்டணமோ எதுவும் வசூலிக்கப்படமாட்டாது.
இந்தியன் ஓவர்சீஸ் பாங்கில் சேமிப்பு மற்றும் கரன்ட் கணக்கு வைத்திருக்கும் 10 வயது முதல் 28 வயதுடைய அனைவரும் இந்த புதிய டெபிட் கார்டை பெற தகுதி உடையவர்கள். இதன் மூலம் ஷாப்பிங் செய்யலாம். ஆன்லைன் ஷாப்பிங், பில் மற்றும் கட்டணம் செலுத்துதல், பயணம், சினிமா டிக்கெட் உள்பட வர்த்தக பரிவர்த்தனைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஏடிஎம்களில் பணம் எடுக்கலாம். இது பற்றி மேலும் விவரம் அறிய விரும்புவோர் தாங்கள் கணக்கு வைத்துள்ள ஐஓபி கிளைகளில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
பெண்களுக்கு சிறப்பு சலுகை குறைந்த வட்டியில் வீட்டு கடன்
தங்களது, பெண் வாடிக்கையாளர்களுக்கு பண்டிகை கால சிறப்பு சலுகையை ஐஓபி அறிவித்துள்ளது. சுப கிரஹா என்ற திட்டத்தின்கீழ் பெண்கள் அனைவரும் வீட்டு கடன் பெறலாம். கடன் தொகை மற்றும் திரும்ப செலுத்தும் தவணை காலம் எப்படி இருந்தாலும் சிறப்பு சலுகையாக 10.25 சதவீதம் வட்டியில் கடன் பெற்றுக் கொள்ளலாம். மற்ற வாடிக்கையாளர்கள் பெறும் வீட்டு கடனுக்கான வட்டி வீதம், ரூ.75 லட்சம் வரையில் 10.25 சதவீதமும், ரூ.75 லட்சத்திற்கும் அதிகமான கடன் தொகைக்கு ரூ.10.50 சதவீதமும் வட்டி வசூலிக்கப்படும். இந்த சிறப்பு சலுகை திட்டத்தின்கீழ் வீட்டு கடன் 2014ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரையில் மட்டும் பெற்றுக் கொள்ளலாம்.
Category: மாநில செய்தி
0 comments