படிப்பு நெருக்கடி அதிகரிப்பு !நாமக்கல் பள்ளியில் பிளஸ்2 மாணவன் தற்கொலை!
நாமக்கல் தனியார் பள்ளியில் படிப்பில் நெருக்கடியை தாங்கமுடியாமல் பிளஸ்2 மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை, அலங்காநல்லு�ரை சேர்ந்த சீனிவாசன் மகன் வெங்கடேஷ் (17). நாமக்கல் குறிஞ்சி மெட்ரிக் பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார். பள்ளி விடுதியில் சக மாணவர்களுடன் தங்கியிருந்தார். பொதுத்தேர்வு நெருங்கி வருவதால் அதிக மதிப்பெண் பெறும் வகையில் மாணவர்களை தயார்படுத்துவதில் பள்ளி நிர்வாகத்தினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை பள்ளி வளாகத்தில் உள்ள படிப்பறைக்கு(ஸ்டடி ரூம்) படிக்க வெங்கடேஷ் வந்தார். சற்று நேரத்தில் பாத் ரூம் செல்வதாக கூறிஅங் கிருந்து வெளியேறினார்.
நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த மேற்பார்வையாளரும், சக மாணவர்களும் வெங்கடேஷை விடுதி மற்றும் கழிவறை பகுதியில் தேடினர். தனது அறையை உள்புறமாக தாழிட்டுக்கொண்ட வெங்கடேஷ் மின்விசிறியில் தூக்கு போட்டு பிணமாக தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவனது நண்பர்கள் விடுதியில் இருந்த ஜன்னல் கதவுகள் மற்றும் டியூப்லைட்களை அடித்து நொறுக்கினர்.
இது பற்றி தகவல் அறிந்த நாமக்கல் டிஎஸ்பி ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் செல்லமுத்து மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். பள்ளி வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். மாணவனின் சடலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு கொண்டு வரப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தற்கொலை செய்து கொண்ட மாணவன் வெங்கடேஷ் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறமுடியாததால் 2 முறை பள்ளி நிர்வாகம் அவரை சஸ்பெண்ட் செய்து வீட்டுக்கு அனுப்பியது. சில ஆசிரியர்களின் பரிந்துரையில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று வெங்கடேஷ் து�க்குபோட்டுதற்கொலை செய்தது பள்ளி மாணவர்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. படிப்பு நெருக்கடி தாங்கமுடியாமல் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
விடுதியை சூறையாடிய சக மாணவர்கள்
தொடர் சம்பவங்கள்
நாமக்கல்:
பொது தேர்வுகளில் மாணவர்களை அதிக மதிப்பெண் வைப்பதற்கு ஏற்ற பயிற்சியை வழங்குவதற்கென நாமக்கல் மாவட்டத்தில் சில தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன. அதிக மதிப்பெண் பெற்றால் போதும் என்ற எண்ணத்தில் விரும்பாத பிள்ளைகளையும் சில பெற்றோர் லட்சக்கணக்கில் செலவழித்து சேர்க்கின்றனர். ஆனால் அங்கு மனம் மற்றும் உடல் ரீதியான நெருக்கடிகள், தேர்வு முறைகளுக்கு தாக்குபிடிக்க முடியாமல் பலர் பாதியில் வெளியேறுகின்றனர். ஆனால் அதற்கும் வழியில்லாத பலர் தற்கொலை முயற்சியில் இறங்குகின்றனர். ஆண்டு தோறும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முன் 2 தனியார் பள்ளிகளில் ஒரு பிளஸ்2 மாணவனும், மாணவியும் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் மட்டும் மூன்று பேர் இறந்தனர்.
நாமக்கல் பள்ளியில் தற்கொலை செய்த மாணவன் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவனது தந்தை மற்றும் உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர்.
Category: மாநில செய்தி
0 comments