இன்னும் இரண்டு வருடத்தில் அனைவருக்கும் வங்கி கணக்கு: மோர் கமிட்டி!
ஒவ்வொரு 18 வயது நிரம்பிய இந்தியருக்கும் ஜனவரி 1,2016க்குள் வங்கி கணக்கு தொடங்கப்பட்டுவிடும் என மோர் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. மோர் கமிட்டி அறிக்கையின் படி 18 வயதிற்கு மேல் உள்ள இந்தியர்களில் 36% பேர் தான் வங்கி கணக்கு வைத்துள்ளனர் என்றும் அதில் 45% பேர் நகர்புறத்திலும்,32% மக்கள் கிராம புறத்திலும் உள்ளனர்,மேலும் 10000 புதிய வங்கி கிளைகள் தொடங்கபட உள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது வங்கிகள் தற்போது மத்திய அரசின் ஆதார் திட்டத்தின் கீழ் 12 இலக்க எண் கொண்ட விவரத்தை வங்கி கணக்குடன் இணைத்து வருகிறது.தற்ப்போது வரை 56,000 கோடி பேருக்கு ஆதார் எண் வழங்கபட்டுள்ளது.மீதமுள்ள 50,000 கோடி பேருக்கும் இன்னும் இரண்டு வருடத்திற்குள் வங்கி கணக்கு தொடங்கபட்டு விடும் என மோர் கமிட்டி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இதன்படி பார்க்கையில் வங்கிகள் ஒரு மாதத்திற்கு 2 கோடி கணக்குகளை புதிதாக தொடங்க வேண்டும்.இந்த அறிக்கையை ஆர்பிஐ பரிசீலித்து வருகிறது |
Category: மாநில செய்தி
0 comments