.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

எப்போதும் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்கணுமா !! இந்த ஏழு உணவுகளை தினமும் சாப்பிடுங்க !!

Unknown | 8:35 PM | 0 comments




அமெரிக்காவில் மனிதனின் மூளை குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் ஆராய்ச்சியாளர்கள், எவ்வகை உணவு வகைகளை சாப்பிட்டால் மனித மூளை சிறப்பாகவும், நினைவாற்றல் அதிகரித்தும் செயல்படும் என்பதை கண்டு பிடித்துள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த, மூளையை சுறுசுறுப்பாக்கும் உணவுகள் பின்வருமாறு, 

இளநீர் 

இளநீரானது மூளையின் நரம்பு செல்கள் மிகவும் சுறுசுறுப்புடன் சரியான வேகத்தில் இயங்கிட தூண்டுகிறது. அருமையான தூய்மையான உணவு இது!

நமது உடலில் பொட்டாஷியம் அளவு குறைந்தால் மூளையின் செயல்திறன் குறைந்து சில நேரங்களில் மனக் குழப்பத்தை உருவாக்கவும் கூடும்.

நீங்கள் அதிகமான அளவு உப்பைத் தின்னும் நிலையிருப்பின், பொட்டாஷியத்தின் தேவை மிகவும் அவசியம் என்கின்றன மருத்துவத் தகவல்கள். நடுத்தர அளவுள்ள வாழைப்பழத்தில் உள்ள பொட்டாஷியம் அளவு சுமார் 450 மில்லி கிராம் ஆகும். 8 அவுன்ஸ் இளநீரில் உள்ள பொட்டா ஷியம் அளவு 250 மில்லி கிராம் ஆகும்!

குளுகோசாக (சர்க்கரை) மாறிவிடும் தன்மை இதற்கு அதிகம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். சர்க்கரை வேகமாக மூளைக்குள் பாய்வதை விட படிப்படியாக (மெதுவாக) மூளைக்குச் செல்லும்போது அதன் பயன் நீடித்தது - சிறப்பானதும் கூட. அவ்வகையில் வாழைப்பழத்தை விட, இளநீரே மிகவும் வரவேற்கத்தக்கதாகும் என்கின்றனர் ஆய்வாளர்கள்!

எனவே ஒவ்வொரு நாளும் 1 குவளை இளநீர் குடிப்பது உடலுக்கு நல்லது.

மஞ்சள்

சமைக்கும் உணவில் இந்த மஞ்சளை சேர்த்து உண்ணும் 1000 முதியவர்களை வைத்து செய்யப்பட்ட ஆராய்ச்சியில் - அவர்களின் மூளைத்திறன் அதன் விளைவான செயல்திறன் கூடுதலாகியுள்ளது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பொதுவாக வாசனை உணவுப் பொருள்கள் எல்லாமே உணவில் இப்படிப் பயன்படுகின்றன. இஞ்சி, லவங்கப்பட்டை போன்றவை மூளைப் பாதுகாப்பு அரண்களாக இருந்து காக்கின்றன!

ப்ளூபெர்ரீஸ்

பிராணவாயுவை மிகவும் ஈர்த்து உடலுக்குள் செலுத்தும் அற்புதமான உணவு இது! ஒருநாள் உணவில் 2400 (ORAC) என அளவு தேவை என்றால் ப்ளூ பெர்ரீஸ் சுமார் 670 செர்ரீஸ், 483 பிங் கலர் திராட்சையின் சத்து இதில் உள்ளதாம்!

அமெரிக்காவின் பிரபல பல்கலைக் கழகங்களில் ஒன்றான டஃப்ட்ஸ் பல்கலைக் கழகத்தில் பிராணிகளுக்கு ப்ளூபெர்ரீஸ் உணவுடன் சேர்த்துக் கொடுத்துப் பார்த்து ஆராய்ச்சி செய்தனர். மூளையின் ஹிபோகேம்பஸ் என்ற பகுதியின் செல்கள் மிகவும் அதிகமாக வளரவும், ஞாபக சக்தி வளருவதற்கும் இது மிகவும் உதவியுள்ளது என்று கண்டறிந்துள்ளனர்.

எனவே ஒவ்வொருநாளும் அரை குவளை ப்ளூபெர்ரீஸ் எடுத்துக் கொள்ளுதல் நல்லது! ப்ளூபெர்ரீஸ் கிடைக்கவில்லையானால், ஸ்டாபெர்ரீஸ் அல்லது அக்காய் பெர்ரீஸ் கன்கார்ட் கிரேப் ஜூஸ் எடுப்பது மிகவும் பலன் பெறும்.

மூளையின் செயலை ஊக்கப்படுத்த சில மருந்து மாத்திரைகளை விட, இந்த கன்கார்ட் கிரேப் ஜூஸ் அருந்தியவர்கள் (76 வயதுள்ள 21 பேர்) - இவர்களில் பலர் சற்று லேசான மூளை செயல்பாடு குறைந்தவர்கள் - இவர்களுக்கு மிகவும் பலன் தந்துள்ளது என்பதை சின்சினாட்டி பல்கலைக் கழக ஆராய்ச்சிகள் தங்களது பரிசோதனை மூலம் கண்டறிந்துள்ளனர். 16 வாரங்களுக்குப் பின் இந்த கன்கார்ட் கிரேப் ஜூஸ் மூலம் பயன் அடைந்தது குறிப்பிடத்தக்கதாகும். எம்.ஆர்.ஐ பரிசோதனை யிலும் இவர்கள் சுறுசுறுப்புடன் இயங்குகிறார்கள். மூளைக்கு ரத்த ஓட்டம் மிகவும் அதிகரித்தது இதன் மூலம்தான் என்று கண்டறிந்துள்ளனர்!

சார்டின்ஸ் மீன்கள்

ஒமேகா -3 சத்து சால்மன் மீனில் அதிகம் உள்ளது. அதன் திரவங்கள் (Fatty acids) கொழுப்புகள், இரண்டும் ஏராளமான ஒமேகா - 3 தந்து, இதயத்தின் முக்கிய ரத்தக்குழாய்களை (Arteries) பாதுகாக்க உதவுகிறது.

இது அளவில் சிறியதாக இருப்பதால், இந்த மீனின் திரவத்தில் உள்ள பாதரசம் அளவும், விஷப் பொருள்களும் மிகவும் குறைவாக இருப்பது இதன் தனிச் சிறப்பாகும். நம் மூளையைச் சுற்றியுள்ள மெல்லிய தசை சுவர்கள் குறிப்புகளை சரிவர வளருவதற்கு இந்த ஒமேகா-3 மிகவும் பயனளிக்கிறது!

இவ்வகை மீன்களை அதிகம் சாப்பிடுவது நினைவு வன்மை, இதைக் குறைவாகச் சாப்பிடுகிறவர்களிடம் குறைவாகவே இருப்பதாக - சுமார் 500 வயது வந்த வாலிபர்களிடம் முயன்று கண்டறிந்துள்ளனர் - டேனிஷ் நாட்டில்! நினைவு தவறும் நோயான டெமென்ஷியா என்பதைக் குறைக்க இது பயன்படும் என்று கண்டறிந் துள்ளனர்! மற்ற வகை மீன்களிடமிருப்பதை விட இந்த வகை சார்மீன்கள் - சாலமின் மீன்களிடமே ஒமேகா-3 அதிகம் உள்ளது.

வால் நட்ஸ்

பொதுவாக எல்லா கொட்டை வகைகளும் மூளைக்கு நல்லவை தான். உப்பு போடாமல், எண்ணெய், நெய்விட்டு வறுக்காத வரை!

வாட்டிய மீன்களைப் போலவே இந்த ஒமேகா-3 சத்து இந்த வாதுமைப் பருப்புகளில் ஏராளம் உண்டு. இதுவே மூளையைப் போலத்தானே காட்சியளிக்கிறது! அத்துடன் வைட்டமின் E -யும் இவற்றில் கூடுதலாகக் கிடைக்கிறது என்பது ஆய்வாளர்களின் முடிவு. அல்ஷைமர்ஸ் முழுமறதி நோய் என்ற அந்த நோயைத் தடுக்க இது உதவி செய்யும்; காரணம் ஒமேகா-3 இதில் ஏராளம் இருப்பதே!

மெக்காடாமியா கொட்டைகளும் இதுபோல சிறந் தவையே. அட்வெண்டிஸ்ட் ஹெல்த் ஸ்டடி குழுவின் லோமா லிண்டா பல்கலைக் கழகத் தின் ஆய்வுப் பிரிவினரால் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது! அதில் வாரம் 5 அல்லது கூடுதலான முறை இந்த வாதுமைப் பருப்புகள், கொட்டை களைச் சாப்பிடுவோர் மாரடைப்பு வரும் வாய்ப்பு சரி பகுதியாகக் குறையக் கூடும் என்றே கூறுகின் றனர் ஆய்வு முடிவாக!
கால்பாகம் - தினசரி சாப்பிடுங் கள். ஆனால் கொட்டைகள் மூலம் கலோரி அதிகம் செடி உணவுகளை விட, அதையும் மனதிற்கொண்டு இவைகளைச் சாப்பிடுவதை ஒழுங்கு படுத்திக் கொள்ளுங்கள்.

இனிப்பு உருளைக் கிழங்குகள்

இவை நமது இரத்தத்தில் உடனடியாக சர்க்கரை அளவைக் அதிகரிக்க விடாது. இதன் மூலம் நமது சக்தியையும் குறையாமல், கவனம் சிதறாமலும் இருக்கவும் - நாள் முழுவதும் - இது உதவுகிறது.

பீட்டா கரோட்டின் என்ற சத்துதான் மூளையைக் கூர்மை மழுங்காமல் காக்கும் சத்து. வாரத்திற்கு இந்த இனிப்பு உருளைக் கிழங்குகளை 2 அல்லது 3 முறை சாப்பிடுங்கள். நேரிடையாக சாப்பிட முடியவில்லையானால் இதை மஞ்சள் கூழாக்கியோ, அல்லது ஸ்பெகடி போலவோ செய்து உள்ளே தள்ளிவிடுங்கள்.

ஓட் மீல் என்ற ஓட்ஸ் கப் சாப்பாடு மலச்சிக்கலைப் போக்கும் முயற்சிகளைப் பலர் அறிவர். ஒரு உருளைக் கிழங்கு அதனைச் செய்து விடுகிறதாம்! இந்த நார்ச்சத்து உணவு மூலம் நமது கொலஸ்ட்ரால் - கொழுப்புச் சத்தைக் குறைத்து: மூளையைச் சுறுசுறுப்பாக்க உதவுகிறது என்பதையும் மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள்!

க்ரீன் டீ

சுற்றுச்சூழல் காற்று மாசு மூலமா கவோ, விஷச்சத்துக்களாலோ, மிக அதிகமான கொழுப்புச்சத்துள்ள உணவுகள் மூலமாகவோ ஏற்படும் கெடுதியிலிருந்தும் இந்த க்ரீன் டீ நம்மை வெகுவாகப் பாதுகாக்கிறது!

நம் மூளைக்குத் தேவையான டோப்பாமைன் என்ற சத்து இந்த க்ரீன் டீயில் அதிகம் உள்ளது.

இந்த டோப்போமைன் தான் மூளை யின் மகிழ்ச்சியைத் தூண்டி பரிசளிக் கும் நரம்பு இயக்கிடும் நிலையம். வாழ்க்கையின் பல முக்கிய கிரியா ஊக்கி மய்யமாகவே இந்த சக்தி செயல்படுகிறது!

க்ரீன் டீயில் உள்ள அமினோ ஆசிட் என்ற சத்தும் மூளை பழுதானவர்களை மீண்டும் செயல்பட உதவிடும் ஒரு துணைவன் ஆவார்; என்னே விந்தை! தீவிர கவனம் சக்தி, குறைந்த கவலை - இவற்றை இந்த அமினோ ஆசிட் பார்த்துக் கொள்கிறது.

உங்களது தினசரி உணவில் ஒரு கால் கரண்டி இவைகளை சேர்த்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். எப்போது சுறுசுறுப்பாக சுறுசுறுப்பாக வாழுங்கள்........

தகவல் - வலை தமிழ்

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1