வரதட்சணை வாங்கும் திருமணங்களை நடத்த மாட்டோம்: பீகார் தலைமை காஜி அறிவிப்பு!
பீகார் மாநிலத்தில், வரதட்சணை வாங்குபர் - கொடுப்பவர்களின் திருமணங்களை இனி நடத்துவதில்லை, என அனைத்து காஜிகளும் கூடிய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
'இமாரத்தே ஷரீஆ' கூட்டமைப்பில் கலந்துக் கொண்டு பேசிய மாநில தலைமை காஜி 'மவுலானா மன்சூர் ஆலம்' நேற்று இதனை அறிவித்தார்.
நாலந்தா மாவட்ட காஜி'க்கள் மாநாட்டில் பேசிய தலைமை காஜி, வரதட்சிணைக்கு எதிராக காஜிக்கள் எடுத்துள்ள இந்த முடிவு, ஒரு வரலாற்று சாதனை என்றார்.
இனி, நாலந்தா மாவட்டத்தின் எந்த ஊரிலும் வரதட்சணை கொடுக்கல் வாங்கல் உள்ள திருமணங்கள் நடத்தி வைக்கப்பட மாட்டாது என்றார்.
வரதட்சணை குறித்து விசாரித்து, பள்ளி நிர்வாகங்கள் மூலம், திருமணத்துக்கு முன்பு 'தடையில்லாச் சான்று' வழங்கப்பட்டால் மட்டுமே திருமணங்கள் நடத்தி வைக்கப்படும் என்றார், தலைமை காஜி.
பீகாரில், வரதட்சிணைக்கு எதிராக'இமாரத்தே ஷரீஆ' நீண்ட நாட்களாக பிரச்சாரங்கள் செய்து வந்தாலும்,
இன்று முதல் இம்மாவட்டத்தில் அமலுக்கு வரும் இந்த நடைமுறை,
விரைவில் மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.
Category: மாநில செய்தி
0 comments