.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

+2 முடித்தவர்களுக்கு முப்படைகளில் பயிற்சியுடன் அதிகாரி பணி!

Unknown | 7:00 PM | 0 comments



தேசிய பாதுகாப்பு அகாடமி(National Defence Academy) மற்றும் இந்திய கப்பற்படை அகாடமி (Indian Naval Academy) பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற்று பின்னர் ராணுவம், விமானப்படை மற்றும் கப்பற்படைகளில் ஆதிகாரி அந்தஸ்து
பணிகளில் சேருவதற்கான தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தவுள்ளது. தகுதியான திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தேசிய பாதுகாப்பு அகாடமியில் 133-வது கோர்ஸ் மற்றும் கப்பல்படை அகாடமியின் 95-வது 10+2 கோர்ஸ் பயிற்சிகள் 02.01.2014 அன்று ஆரம்பமாக உள்ளது.மொத்த காலியிடங்கள்: 375துறைவாரியான காலியிடங்கள் விவரம்:இராணுவம் -208, கப்பற்படை -42, விமானப்படை -70, இந்திய நேவல் அகாடமி(+2Entry Scheme) -55வயதுவரம்பு: 02.07.1995-க்கு முன்போ அல்லது 01.01.1998-க்கு பின்போ பிறந்திருக்கக்கூடாது.கல்வித்தகுதி: தேசிய பாதுகாப்பு அகாடமியின் ராணுவ பிரிவிற்கு +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.தேசிய பாதுகாப்பு அகாடமியின் விமானப்படை, கப்பற்படை பிரிவு மற்றும் கப்பற்படை அகாடமியின் (Cadet Entry Scheme) பிரிவிற்கு இயற்பியல், கணிதம் போன்றபாடப்பிரிவுகளில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். +2 தேர்வு எழுத இருப்பவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.தேர்வு கட்டணம்: ரூ.100. இதனை இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள செல்லானை பதிவிறக்கம் செய்து பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகளில் செலுத்தலாம். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு கட்டணம் செலுத்த தேவையில்லைதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யபப்டுவார்கள்.எழுத்துத்தேர்வு வினாத்தாள்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் அமைந்திருக்கும்.எழுத்துத்தேர்வு மையம்: பெங்களூர், திருவனந்தபுரம், தமிழகத்தில் சென்னை, மதுரை உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெறும்.அனுமதி கடிதம்: எழுத்துத்தேர்வுக்கான அனுமதி கடிதம் விண்ணப்பதாரர்களுக்கு இ-மெயில் அல்லது www.upsc.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பயிற்சி: தேசிய பாதுகாப்பு அகாடமியின் ராணுவம், கப்பற்படை, விமானப்படை பிரிவுகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு 3 ஆண்டுகள் கல்வி மற்றும் பாதுகாப்பு பிரிவு பயிற்சிகள் அளிக்கப்படும். பயிற்சியின் முடிவில் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தால் பி.எஸ்சி, பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.ஏ பட்டங்கள் வழங்கப்படும்.கப்பற்படை அகடாமி பிரிவிற்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு 4 வருட பி.டெக் பயிற்சி அளிக்கப்பட்டு பட்டம் அளிக்கப்படும். இப்பயிற்சி முடிந்தபின் ராணுவ பரிவினருக்கு ராணுவ பிரிவினருக்கு டெஹராடூனிலும், கப்பற்படை பரிவினருக்கு கொச்சியிலும், விமானப்படை பிரிவினருக்கு ஹைதராபாத்திலும் ஒரு வருட பயிற்சி அளிக்கப்படும். அதன்பிறகு பணியில் அமர்த்தப்படுவார்கள்.விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.01.2014மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.upsc.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்

Category: ,

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1