கைகளால் எழுதிய பாஸ்போர்ட் 2015 வரை மட்டுமே செல்லும்!
திருச்சி, ஜன. 3:
கைகளால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகள் அடுத்தாண்டு நவம்பர் மாதத்துக்கு பின்னர் செல்லாது. எனவே கம்ப்யூட்டர் பிரிண்ட் செய்யப்பட்ட பாஸ்போர்ட்டுகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என பாஸ்போர்ட் அலுவலர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 37 பாஸ்போர்ட் அலுவலகங்கள், 76 பாஸ்போர்ட் சேவை மையங்கள், மாவட்ட பாஸ்போர்ட் மையங்கள் மூலம் பாஸ்போர்ட் விநியோகிக்கப்படுகிறது. தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய பகுதிகளில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களும், திருச்சி, தஞ்சை, நெல்லை, மதுரை, கோவை, சென்னை ஆகிய பகுதிகளில் பாஸ்போர்ட் சேவை மையங்களும் உள்ளன. இவற்றின் மூலம் மண்டலம் தோறும் ஆண் டுக்கு 1.50 லட்சம் பாஸ்போட்டுகள் வழங்கப்படுகின்றன.
பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பது முதல் பாஸ் போர்ட் வழங்குவது வரை யில் அனைத்து பணிகளும் கம்ப்யூட்டர் மயமாகியுள் ளன. சில மாநிலங்களில் போலீஸ் சான்று கூட ஆன்லைன் மூலம் வழங்கப்படுவதால் பாஸ்போர்ட் மிகவும் குறுகிய காலத்தில் வழங்கப்படுகின்றது. தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் முற்றிலும் ஆன்லைன் மூலம் போலீஸ் சான்று வழங்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது திருச்சி மண்டலத்திலும் திருச்சி மாவட்டம் உள்பட பல்வேறு பகுதிகளில் ஆன்லைனின் போலீஸ் சான்று பெறும் வசதி செய்யப்பட்டு வருகின்றன.
2001ம் ஆண்டுக்கு முன், விண்ணப்பதாரரின் படங்களை ஒட்டி விபரங்களை கைகளால் எழுதப்பட்டு போட்டோ மற்றும் விபரங்கள் அடங்கிய பக்கத்தை லேமினேஷன் செய்து பாஸ்போர்ட்டுகள் வழங்கும் முறை அமலில் இருந்து வந்தது. அதன் பின்னர் விண்ணப்பதாரரின் விபரங்கள் அச்சிடப்பட்டு, போட்டோக்களை ஒட்டி அதனை லேமினேஷன் செய்யும் முறை பின்பற்றப்பட்டது. தற்போது அனைத்து விபரங்களும் கம்ப்யூட்டர் மூலம் பிரிண்ட் செய்யப்பட்டு போட்டோ மற்றும் விபரங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு வழங்கப்படுகின்றன. இதனால் பாஸ்போர்ட் முறைகேடுகள் கணிசமாக குறைந்துள்ளன.
இந்நிலையில் சர்வதேச விமான போக்குவரத்து நிறுவனம் (சிவில் ஏவியேஷன் ஆர்கனிசேஷன்) கைகளால் எழுதப்பட்டு மற்றும் போட்டோக்கள் மாற்றப்பட்ட பாஸ்போர்ட்டுகள் அடுத் தாண்டு முதல் செல்லாது என அறிவித்துள்ளது. அதன் எதிரொலியாக இந்திய வெளி விவகாரத் துறை அமைச்சகம் கைக ளால் எழுதப்பட்ட பாஸ் போர்ட் வைத்திருப்பவர் கள் புதிய பாஸ்போர்ட் எடு த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலர் பாலமுருகன் தெரிவித்துள்ளதாவது, வரும் 2015 நவம்பர் 24ம் தேதிவரை மட்டுமே கைகளால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகள் செல்லுபடியாகும். 25ம் தேதிக்கு பின்னர் செல்லாது என சிவில் ஏவியேசன் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில் 20 ஆண்டுகள் பயன்படுத்தும் வகையிலான பாஸ்போர்ட்டுகளை கடந்த 2001வது ஆண்டுக்கு முன்பு வரையில் வழங்கப்பட்டுள்ளது.
அதுபோன்ற பாஸ்போர்ட்டுகள் வைத்திருப்போர், அவை காலாவதியாகாமல் பயன்பாட்டில் இருந்தாலும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கைகளால் எழுதப்பட்ட பாஸ்போர்டை வைத்து எந்த நாட்டு தூதரகங்களிலும் விசா பெறவோ, நுழையவோ அனுமதிக்கப் படமாட்டார். எனவே இயந்திரங்களால் அச்சிடப்பட்ட பாஸ்போர்ட்டுகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.
அதேபோல பாஸ் போர்ட் பெற விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்த விபரங்களை இனி ஆன்ட்ராய்டு செல்போன் கள் மூலமும் தெரிந்து கொள்ள புதிய மென் பொருள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் வீடியோ கேம்கள் விளையாடுவதைப் போலவே ஆன்ட்ராய்டு செல்போன்களில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி? என அறிந்துகொள்ள முடியும். மேலும் பாஸ்போர்ட் கட்டணங் கள், அலுவலகங்கள், பெறும் வழிமுறைகள், விதிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங் களை இ மெயில்:
இணையதளம்:
அதிகாரி தகவல்
Category: மாநில செய்தி
0 comments