.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக "அம்மா' திட்ட முகாம்

Unknown | 8:37 PM | 0 comments

இரண்டாம் கட்டமாக 11 குறு வட்டங்களில் "அம்மா' திட்ட முகாம்கள் வெள்ளிக்கிழமை (டிச. 20) நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக "அம்மா' திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி, பெரம்பலூர் குறுவட்டம் புதுநடுவலூர், குரும்பலூர் குறுவட்டம் பொம்மனபாடி, வேப்பந்தட்டை வட்டம், வெங்கலம் குறுவட்டம் வெங்கலம் (மேற்கு), பசும்பலூர் குறுவட்டம் பாண்டகப்பாடி, வாலிகண்டபுரம் குறுவட்டம் எறையூர், குன்னம் வட்டம், கீழப்புலியூர் குறுவட்டம் அசூர், வடக்கலூர் குறுவட்டம் கிழுமத்தூர் (தெற்கு), வரகூர் குறுவட்டம் பெரியவெண்மணி (மேற்கு), கொளப்பாடி, ஆலத்தூர் வட்டம், கூத்தூர் குறுவட்டம் திம்மூர், செட்டிக்குளம் குறுவட்டம் இரூர், கொளக்காநத்தம் குறுவட்டம் கொட்டரை உள்ளிட்ட 11 கிராமங்களில் "அம்மா' திட்ட முகாம்கள் நடைபெற உள்ளன.  எனவே, சம்பந்தப்பட்ட வருவாய் கிராமங்களுக்கு உள்பட்ட பொதுமக்கள் முகாம்களில் பங்கேற்று பயன்பெறலாம்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1