வி.களத்தூரில்,நாளை "அம்மா' திட்ட முகாம் நடைப்பெருகிறது!
பெரம்பலூர் மாவட்டத்தில் 11 குறு வட்டங்களில் "அம்மா' திட்ட முகாம்கள் வெள்ளிக்கிழமை (டிச. 6) நடைபெற உள்ளது. இதுகுறித்து ஆட்சியர் தரேஸ் அஹமது தெரிவித்துள்ளது:
"அம்மா' திட்ட முகாம்கள் இரண்டாம் கட்டமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி, பெரம்பலூர் குறு வட்டம் அரணாரை (வடக்கு), குரும்பலூர் குறு வட்டம் களரம்பட்டி, வேப்பந்தட்டை வட்டம் வெங்கலம் குறு வட்டம் தொண்டமாந்துரை (மேற்கு), பசும்பலூர் குறு வட்டம் பசும்பலூர் (வடக்கு),
வாலிகண்டபுரம் குறு வட்டம் வி.களத்தூர்,
குன்னம் வட்டம் கீழப்புலியூர் குறு வட்டம் எழுமூர் (மேற்கு), வடக்கலூர் குறு வட்டம் அத்தியூர் (தெற்கு), வரகூர் குறு வட்டம் காடூர் (வடக்கு), ஆலத்தூர் வட்டம் கூத்தூர் குறு வட்டம் புஜங்கராயநல்லூர், செட்டிக்குளம் குறு வட்டம் கண்ணப்பாடி, கொளக்காநத்தம் குறு வட்டம் கொளத்தூர் (கிழக்கு) உள்ளிட்ட 11 கிராமங்களில் "அம்மா' திட்ட முகாம்கள் நடைபெற உள்ளன.
சம்பந்தப்பட்ட வருவாய் கிராமங்களுக்கு உள்பட்ட பொதுமக்கள் முகாம்களில் பங்கேற்று பயன்பெறலாம்.
Category: வி.களத்தூர்


0 comments