பெரம்பலூர் மாவட்டத்தில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதி வழங்கும் சிறப்பு முகாம்!
பெரம்பலூர் மாவட்டத்திற்குட்பட்ட காவல் நிலைய எல்லைக்குள் 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் சாலை விபத்தில் மரணமடைந்தவரின் வாரிசுகளுக்கும், பெரும் காயம் மற்றும் சிறு காயம் அடைந்த நபர்களுக்கும் முதலமைச் சரின் சாலைவிபத்து நிவாரண நிதியின் கீழ் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் விரைவில் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் வருகிற 4–ந் தேதி (சனிக்கிழமை) அன்று மாவட்ட கலெக்டர் தலைமை யில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து இம்முகாம் நடத்தப்படவுள்ளது. எனவே சாலைவிபத்தில் இறந்த நபரின் வாரிசுதாரர்கள், பாதிக்கப் பட்ட நபர்கள் தங்களது குடும்ப அட்டை நகல், வாரிசுச்சான்று, இறந்த நபருக்கான இறப்புச்சான்று ஆகிய ஆவணங்களின் நகல்களுடன் தவறாது இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் தரேஸ் அஹமது தெரிவித்துள்ளார்.
Category: மாவட்ட செய்தி


0 comments