.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பெரம்பலூரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் தொடங்கி வைத்தார்!

Unknown | 7:58 PM | 0 comments



பெரம்பலூர், டிச.3-

பெரம்பலூரில் மாவட்ட அளவிலான எய்ட்ஸ், டெங்கு மற்றும் மனித நேய விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் தரேஸ் அஹமது கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம்

எய்ட்ஸ், டெங்கு நோய் குறித்த விழப்புணர்வை மக்க ளிடையே ஏற்படுத்தும் வகை யிலும், மனித நேய உணர்வு களை வளர்க்கும் வகையிலும் இளம் செஞசிலுவை அமைப் பின் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர். தரேஸ் அஹமது கொடியசைத்து தொடங்கி வைத்தார். பெரம்பலூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் தொடங்கிய ஊர்வலம் கனரா வங்கி, பழைய பஸ் நிலையம், காமராஜர் வளைவு, பாரத ஸ்டேட் வங்கி வழியாக ஊர்வலம் சென்று சங்கு, சிவன் கோவில், தேரடி, அமராவதி மற்றும் அரசு மருத்துவமனை வழியாக மறுபடியும் பெரம் பலூர்அரசு மேல்நிலைப்பள்ளியை சென்றடைந்தது.

ஊர்வலத்தில் பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 250 மாணவிகளும்¢, 450 மாண வர்களும் ஆக மொத்தம் 700 மாணவ, மாணவிகள் 50க்கும் மேற்பட்ட பள்ளி ஆசிரியர்கள்¢ கலந்து கொண்டனர்.

துண்டு பிரசுரங்கள்

ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகள் எய்ட்ஸ், மற்றும் டெங்கு காய்ச் சல் வராமலும், பரவாமலும் தடுப்பது குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகை களை ஏந்தியவாறும், கோஷங் களை எழுப்பியவாறும் நகரை வலம் வந்தனர். மேலும் எய்ட்ஸ் நோய் மற்றும் டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப் புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும் பொது மக்களுக்கு மாணவ, மாணவிகள் வழங்கி சென்ற னர்.

ஊர்வலத்தில் மாவட்ட காவல் துணை கண்காணிப் பாளர் சுருளி ஆண்டி, இணை இயக்குநர் மருத்துவப் பணிகள் குமார், மாவட்ட சுகாதார திட்ட அலுவலர் ஜெயந்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகாலிங்கம், மாவட்ட கல்வி அலுவலர் வெங்கடாஜலபதி, உள்பட பலர் கலந்து கொண்ட னர்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1