சிதறிக் கிடக்கும் முஸ்லிம் பெரும் படை!
காலத்தின் கட்டாயம். இந்திய இஸ்லாமியர்களின்
இன்றைய அரசியலில் அவல நிலை...
இந்தியாவின் மொத்த வாக்காளரின் எண்ணிக்கை
72 கோடிக்கு மேல். அதில் முஸ்லிம் வாக்காளரின்
எண்ணிக்கை 18 கோடிக்கு மேல். இந்தியாவின் மொத்த
பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 542.
72 கோடியை 542 ஆக வகுத்தால் ஒரு எம்.பி யை
தேர்ந்தெடுக்க 1328413 பேர் வேண்டும். அப்படியென்றால்
18 கோடி முஸ்லிம் வாக்காளர்கள் 135 எம்.பி யை
தங்கள் கைவசம் வைத்திருக்க வேண்டும்! ஆனால்
30 எம்.பி' யை கூட தாண்டவில்லை. இதே கணக்கை
முதல் அமைச்சருக்கும் போட்டுப் பாருங்கள். மத்திய
அமைச்சருக்கும் போட்டுப் பாருங்கள் முஸ்லிம்களின்
அரசியல் சக்தி பூஜியத்தில் தான் இருக்கும்.
இதற்கெல்லாம் காரண காரியங்களை இந்த முஸ்லிம்
சமுதாயம் மிக விரைவிலே கண்டுபிடித்தாக வேண்டும்.
கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் 135 எம்.பி முஸ்லிம்
கைவசம் இருந்தால் முஸ்லிம் சமூகத்தை புறக்கணித்து
விட்டு யாராவது பிரதமர் ஆக முடியுமா? RSS காரன்
முஸ்லிம்களை அழிக்கவேண்டும் என்று ஓப்பனாக
பேசுவானா? VHP யை சேர்ந்தவன் முஸ்லிம்களின்
ஓட்டுரிமைகளை பறிக்கவேண்டும் என்று பேசுவானா?
ஏன் இவர்களுக்கு காவடி தூக்கும் பி.ஜே.பி கூட
முஸ்லிம்களை எதிர்க்கும் நிலைமை உருவாகியிருக்காது
என்பதுதான் நிதர்சன உண்மை. ஆக அரசியலில்
முஸ்லிம்கள் விழித்துக் கொள்வதே எல்லாவற்றுக்கும்
நிரந்தர தீர்வு...
Category: முஸ்லிம்


0 comments