பெரம்பலூரில் வரும் 15ம்தேதி இலவச இருதய சிகிச்சை முகாம்!
பெரம்பலூர்,டிச.10–
பெரம்பலூர் ரோட்டரி கிளப் மற்றும் திருச்சி காவேரி மருத்துவமனையும் இணைந்து இலவச இருதய மருத்துவ சிகிச்சை முகாமினை வரும் 15ம்தேதி நடத்துகிறது.
பெரம்பலூர் ரோவர் மேல்நிலைப்பள்ளியில் வரும் 15ம்தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை நடைபெறும் முகாமில் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை, ஈசிஜி எக்கோ ஆகியவை பரிசோதனை செய்யபடுகிறது.
இதில் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்படுவோர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்படும். எனவே பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பொது மக்கள் முகாமில் கலந்துகொண்டு பயன் பெறலாம் என ரோட்டரி கிளப் தலைவர் குணசேகரன் செயலாளர் ஜெய்பிரகாஷ் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Category: மாவட்ட செய்தி


0 comments