திருச்சியில் துணிகரம்: ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி வாலிபர் கைது!
திருச்சி, டிச. 23:
திருச்சியில் ஏடிஎம் இயந்திரத்தை கல்லால் உடைத்து கொள்ளை அடிக்க முயன்ற கூலிப்படை பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி சத்திரம் பஸ் நிலைய பகுதியில் உள்ள மகளிர் கல்லூரி அருகே 3க்கும் மேற்பட்ட அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளின் ஏடிஎம் மையம் உள்ளது. இதில் ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் வங்கியின் ஏடிஎம் மையத்திற்கு காவ லாளி கிடையாது. நேற்று அதிகாலை 2 மணியளவில் இந்த ஏடிஎம் மையத்தில் இருந்து சத்தம் கேட்டது. அப்பகுதியில் இருந்தவர்கள் சென்று பார்த்த போது வாலிபர் ஒருவர் பெரிய கல்லை கொண்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொண்டிருந்தார்.
இதுகுறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசுக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். அங்கு வந்த போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கட லூர் மாவட்டம், குறிஞ்சிநகர் பாண்டி யன் மகன் ஸ்ரீதர் (22) என்பது தெரியவந்தது.
தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஸ்ரீதர் வேலை தேடி 3 மாதங்களுக்கு முன் திருச்சி வந்துள்ளார். சமையல் வேலை உள்பட கிடைக்கும் வேலையை செய்து வந்த அவர், ஏதாவது ஒரு இடத்தில் படுத்து தூங்கி வந்துள்ளார். இந்நிலையில் கையில் பணம் இல்லாததால் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடை த்து கொள்ளையடிக்க முயன்றுள்ளார். மேலும் அதே பகுதி பூசாரி தெருவில் ரமேஷ்குமார் என்பவரின் இரும்பு கடையில் கைவரிசை காட்டியதும் விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ஸ்ரீதர் இது போன்ற பல் வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த ஆண்டில் கோவையில் வாலிபர் ஒரு வரை கொலை செய்ததற்காக இவருக்கு ரூ.2 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. பணம் செலவானதை அடுத்து திருச்சி வந்து சில கொள்ளைகளில் ஈடுபட்டு தற்போது சிக்கியுள்ளார் என்றனர். ஸ்ரீதரை திருச்சி ஜேஎம் 1 கோர்ட்டில் மாஜிஸ்திரேட் (பொ) ராஜாராம் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
| கடலூரை சேர்ந்த ஸ்ரீதர் |
Category: மாநில செய்தி


0 comments