செளதி அரேபியாவில் உயிரிழந்த பெரம்பலூர் இளைஞர் உடல் கொண்டு வர ஆ. ராசாவிடம் கோரிக்கை மனு!
செளதி அரேபியாவில் உயிரிழந்தவரின் சடலத்தைக் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி அவரது உறவினர்கள், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவிடம் சனிக்கிழமை மனு அளித்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், பாளையம் கிராமம், நடுத்தெருவைச் சேர்ந்தவர் பெரியதம்பி மகன் முருகன் (45). அவரது மனைவி புஷ்பா (38). முருகன் கடந்த 10 ஆண்டுகளாக செüதி அரேபியா நாட்டில், அப்துல்லா என்பவரிடம் கூலிவேலை செய்துவந்தாராம். அவரது தம்பி நடராஜனும் (36) அதே பகுதியில் வேலைபார்த்து வருகிறாராம். இந்நிலையில் சனிக்கிழமை நெஞ்சுவலி ஏற்பட்டு உனேஜா நகரில் உள்ள புதாயா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முருகன் இறந்துவிட்டாராம்.
இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு நடராஜன் சனிக்கிழமை தகவல் அளித்துள்ளார். அதைத்தொடர்ந்து, உயிரிழந்த முருகனின் சடலத்தையும், அவர் பணிபுரிந்த மற்றும் செüதி அரேபியா நாட்டிலிருந்து கிடைக்க வேண்டிய நிவாரண உதவிகளையும் பெற்றுத்தரக் கோரி ஆ. ராசாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
Category: மாவட்ட செய்தி


0 comments