.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

திருச்சியை சர்வதேச மருத்துவ சுற்றுலா நகரமாக மாற்ற முயற்சி!-அப்போலோ மருத்துவ குழும தலைவர் தகவல்!

Unknown | 7:30 PM | 0 comments


திருச்சி, டிச. 23:
திருச்சியை சர்வதேச மருத்துவ சுற்றுலா நகரமாக மாற்றும் வகையில், சுகாதார பாதுகாப்பை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லப்படும் என அப்போலோ மருத்துவ குழும தலைவர் பிரதாப் சி.ரெட்டி கூறினார்.
திருச்சி&தஞ்சை சாலை பால்பண்ணை அருகே உள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்று மருத்துவ குழுமத்தின் தலைவர் பிரதாப் சி.ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:
அப்போலோ திருச்சிக்கான திட்டம் 2011 பிப்ரவரியில் கட்டுமான பணிகள் துவங்கப்பட்டது. பணிகள் நிறைவுற்று 2013 நவம்பர் மாதம் தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது. அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள திருச்சி மருத்துவமனை பல்வேறு மருத்துவ துறைகளில் ஹை&எண்ட் பாதுகாப்பை வழங்கும். இந்த மருத்துவமனையில் 1,75,000 சதுர அடியில் 225 படுக்கை வசதியுடன் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக உள்ளது. நவீன தொழில்நுட்பம், சர்வதேச பயிற்சி பெற்ற டாக்டர்கள், அல்ட்ரா மாடர்ன் லேபரட்டரி வசதியுடன் இயங்கி வருகிறது. துளையில்லா இதய சோதனை மற்றும் துளையிடலுக்கான நடைமுறைகளுக்கான மேம்பட்ட கேத்லாப் இரண்டுக்கும் சிறப்பு கவனம் எடுக்கப்பட்டு வருகிறது. 5 உள்நாட்டு தொழில்நுட்ப ஆபரேசன் தியேட்டர்கள், வயர்லெஸ் வசதியுடன் கூடிய 5ஆம்புலன்ஸ்கள், முழு நேர எமர்ஜென்சி மற் றும் விபத்து மையம் உள் ளது. தனி எம்ஐசியு, சிடிசியு, சிசியுவுடன் 32 கிரிட்டிகல் கேர் பெட்கள், ஹை டிப்டென்சி ஸ்டெப் டவுன் யூனிட்டுடன் நியூரோ ஐசியு, கோல்டன் ஹவர் சமயத்தில் அவசர சிகிச்சை அளிப்பதற்காக 24 மணி நேர அப்போலோ நெஞ்சுவலி கிளினிக் ஆகியவை உள்ளது. திருச்சியில் துவங்கப்பட்ட அப்போலோ மருத்துவமனையில் இதுவரை நோயாளிகளின் சேர்க்கை 62 சதவீதம் உள்ளது. இங்கு சிஓபிஜி உள்ளிட்ட 50 கார்டியோவாஸ்குலர் அறுவை சிகிச்சைகள், 200ஆஞ்சியோ கிராபி மற்றும் ஆஞ்சியோ பிளாஸ்டிக், 25 மூளை கட்டிகள் உள்ளடக்கிய நியூரோ சர்ஜரி, முதுகு, பாலிடிராவுமா அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 500க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சி அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் மருத்துவமனைகளுக்கான தேசிய அங்கீகார வாரிய பரிந்துரைப்படி, தரமான நிர்வாக முறை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. திருச்சியில் சர்வதேச விமான நிலையம் உள்ளதால், சர்வதேச மருத்துவ சுற் றுலா பயணிகளுக்கான, அடுத்த பெரிய மையமாக திருச்சி நகரம் திகழும். 1983ல் சென்னையில் அப்போலோ மருத்துவமனை கார்ப்பரேட் மருத்துவமனையாக துவங்கப்பட்டது. தற்போது 61 மருத்துவமனைகள், 1,517 மெடிக்கல், 102 டயக்கோஸ்டிக் கிளினிக்குகள் உள்ளது. மேலும் மருத்துவ இன்சூரன்ஸ் சேவைகள், ஹெல்த்கேர் ஐடி சேவைகள், தொற்றுநோய் ஆய்வுகள், செல் ஆராய்ச்சி மற்றும் மரபணு ஆராய்ச்சி நிலையம் உள்ளது. மேலும் ஒரு மருத்துவக்கல்லூரி, 8 நர்சிங் கல்லூரிகள், 3 நர்சிங் பள்ளிகள், 2 மேலாண்மை கல்வி நிலையம், 1 பிசியோதெரபி கல்லூரி, 15 பாராமெடிக்கல் புரோகிராம்கள் ஆகியவையும் செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறி னார்.
பேட்டியின்போது, மருத்துவமனை தலைமை செயல் அலுவலர் சத்திய நாராயண ரெட்டி, டாக்டர்கள் ரோகிணி ஸ்ரீதர், பிரேமா குமார், சத்யபிரியா ஆகியோர் உடன் இருந்தனர்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1