பெரம்பலூர் அருகே குடிக்க பணம் தர மறுத்த தாய் கொலை: "பாசக்கார' மகன் கைது!
குன்னம்,
குடிக்க பணம் தர மறுத்த தாயை, அடித்து கொலை செய்த மகனை குன்னம் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
முதியோர் உதவித்தொகை
குன்னம் அருகே உள்ள புஜங்கராயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மகன் பூபதி (வயது 35) திருமணம் ஆகவில்லை. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் பூபதியின் தாய் நல்லம்மாள் (வயது 67) அரசால் வழங்கப்படும் முதி யோர் உதவித்தொகை ஆயிரம் ரூபாயை நேற்று பெற்றதாக தெரிகிறது.
அடித்துக்கொலை
இதனையறிந்த பூபதி, நேற்று மதியம் 3 மணியளவில் குடி போதையில் தாய் நல்லம்மா ளிடம் குடிக்க பணம் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு நல்லம் மாள் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பூபதி, நல்லம்மாளை கட்டை யால் சரமாரியாக தாக்கியதால் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கைது
இது குறித்து தகவலறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நல்லம் மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து நல்லம்மாளின் மூத்த மகன் கணபதி (வயது 39) கொடுத்த புகாரின்பேரில் குன்னம் போலீஸ் இன்ஸ் பெக்டர் சோலைமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் பாண்டி யன், ஏட்டு இளவரசன் போலீசார் ராஜா ஆகியோர் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓட முயன்ற பூபதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Category: மாவட்ட செய்தி


0 comments