.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

வி.களத்தூர் உள்பட 30 ஊராட்சிகளில் விளையாட்டு போட்டிகள் வருகிற 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுகோள்

Unknown | 3:00 AM | 0 comments



பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் வி.களத்தூர் உள்பட உள்ள 30 ஊராட் சிகளில் வருகிற 2-ந் தேதி முதல் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் கலந்து கொள்வோர் வருகிற 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுகோள் விடப் பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் உத்தரவு
கிராம மக்களிடையே விளையாட்டு ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில் “கிராம ஊராட்சி விளை யாட்டு போட்டிகள்” நடத்திட ஒரு கிராம ஊராட்சிக்கு ரூ.20 ஆயிரம் வீதம் அரசு நிதி ஒதுக் கீடு செய்து தமிழக முதலமைச் சர் உத்தர விட்டுள்ளார். இதன் முதல் கட்டமாக ஒவ் வொரு மாவட்டத்திலும் நான் கில் ஒரு பகுதி யில் இப்போட் டிகள் நடைபெறும்.
ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங் களிலும் உள்ள கிராம ஊராட்சிகளில் மக்கள் தொகை அதிகமாக உள்ள கிராம ஊராட்சிகள் என்கிற அடிப்படையில் 30 கிராம ஊராட்சிகளில் விளை யாட்டுப்போட்டிகள் நடத்த கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
30 ஊராட்சிகள்
அதனடிப்படையில் இலாடபுரம், எளம்பலூர்,. எசனை, கல்பாடி அம்மா பாளையம், அன்னமங்கலம், 
வி.களத்தூர், 
தொண்ட மாந்துறை, தேவையூர், கை.களத்தூர், நூத்தாப்பூர், எறை யூர், பாடாலூர், செட்டிகுளம், நக்கசேலம், நாரணமங்கலம், காரை, து.களத்தூர், இரூர், சிறுவயலூர்,எலந்தலப்பட்டி, கீழமாத்தூர்,கீழப்புலியூர், ஓலைப்பாடி, துங்கபுரம், சிறு மத்தூர், பேரளி, கீழப் பெரம் பலூர், அத்தியூர், எழுமூர் ஆகிய 30 கிராம ஊராட்சிகளில் வருகிற 2-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை விளை யாட்டுப் போட்டிகள் நடத்தப்படும்.
போட்டிகள்
ஆண்கள் மற்றும் பெண்கள் பங்குபெறும் தடகள போட்டி கள், கையுந்து பந்து போட்டிகள் மற்றும் கபடி போட்டிகளும், ஆண்கள் மற்றும் பங்குபெறும் கால்பந்து போட்டிகளும் நடத்தப்பட வுள்ளன.
இதில் தனி நபர் போட்டி களாக 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், மற்றும் வட்டு எறிதல் போட்டி களும், குழுப் போட்டிகளாக கையுந்துபந்து போட்டி, கபடி, கால்பந்து ஆகிய போட்டிக ளும் நடத்தப் படவுள்ளன. இப்போட்டி களில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் 30 வயதிற்கு கீழ் உள்ளவர்களாக இருக்க வேண்டும். போட்டி யாளர் களின் தேர்தல் அடை யாள அட்டை அல்லது குடும்ப அட்டை உள்ளிட்ட அடை யாள அட்டைகளின் அடிப் படையில் விளை யாட்டுப் போட்டியில் பங்கு பெறுவோர் விவரம் பதியப் படும்.
மாற்றுத்திறனாளிகள்
ஊராட்சியில் உள்ள எஸ்.சி. மற்றும் எஸ்.டிமக்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள், இளை ஞர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் இப் போட்டி களில் முழுமையாக பங்கேற்கலாம். பேரூராட்சி மற்றும் வருவாய் கிராம ஊராட்சிகளை சேர்ந்த பணியாளர்கள் இப்போட்டி களில் கலந்து கொள்ள கூடாது.
ஆண், பெண் இருபாலருக் கும் தனித்தனியே போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள பள்ளி விளையாட்டு திடல், சமுதாய கூட வளாகம் அல்லது பொதுத் திடலில் போட்டிகள் நடைபெறும்.
அந்தந்த கிராமத்தை சார்ந்த மற்றும் அருகில் உள்ள பள்ளி உடற்கல்வித்துறை ஆசிரியர் களின் உதவியுடன் போட்டிகள் நடைபெறும்.
31-ந் தேதிக்குள்
இந்த விளையாட்டு போட்டி களில் பங்கு பெற விரும்புவோர் தங்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வருகிற 31-ந் தேதிக்குள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.இப்போட்டியில் வெற்றி பெறும் முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கு தகுதிச்சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்படும். தகுதியுடையோர் இந்த வாய்ப்பினை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் தரேஸ் அஹமது தெரிவித்துள்ளார்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1