துபை கடலில் மிதந்த ராட்சச வாத்து!(வீடியோ)
துபை: ஐக்கிய அரபு அமீரக தொழில் நகரமான துபை, எதைச்செய்தாலும் வித்தியாசமாகவும், பிரம்மாண்டமாகவும் செய்து அசத்தும். அவ்வகையில்,
தண்ணீர் சேமிப்பை வலியுறுத்தியும், குடிநீர் வீண்விரயம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஜியோகார்வாஷ் என்ற நிறுவனம், துபையின் மத்தியிலுள்ள கிரீக் கடல்நதியில் 18 மீட்டர் உயரமுள்ள ராட்சச பொம்மை வாத்தை மிதக்கவிட்டிருந்தது.
டிசம்பர்-1,2013 முதல் மிதந்து கொண்டிருந்த இந்த வாத்து திடீரென்று காணாமல் போனது! இந்த வாத்து குறித்த செய்தி, மக்களிடையே பிரபலமானதைத் தொடர்ந்து பலரும் கிரீக் பகுதியைக் கடந்து செல்லும்போது நோட்டமிட்டபடியே செல்கின்றனர்.

இதுகுறித்து Geo Car Wash நிறுவனத்திடம் கேட்டபோது, "மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த வாத்து யாரும் எதிர்பாராத தினங்களிலும், பகுதிகளிலும் திடீர் திடீர் என தோன்றும் வகையில் திட்டமிட்டுள்ளோம்" என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், "இந்த வாத்தை வித்தியாசமான கோணங்களில் படம் பிடித்து அனுப்புபவர்களுக்கு ஐபேட் போன்ற விலையுயர்ந்த பரிசுகள் ஓட்டு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்படும்" என்றும் அறிவித்துள்ளனர்.
மேலும், "இந்த வாத்தை வித்தியாசமான கோணங்களில் படம் பிடித்து அனுப்புபவர்களுக்கு ஐபேட் போன்ற விலையுயர்ந்த பரிசுகள் ஓட்டு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்படும்" என்றும் அறிவித்துள்ளனர்.
Category: துபாய்

0 comments