வெள்ளிக்கிழமைகளில் தாஜ்மஹாலில் தொழுகை செய்ய அடையாள அட்டை அவசியம்!
புதுடெல்லி, டிச. 28:
ஆக்ராவில் அமைந்துள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த 2001 ஜனவரி 1ம் தேதி முதல் வெள்ளிக்கிழமைகளில் தாஜ் மஹாலில் இந்தியாவை சேர்ந்த இஸ்லாமியர்கள் மட்டும் சென்று தொழுகையில் ஈடுபடலாம் என அரசு அறிவித்தது. அதே நேரத்தில், பிற நாட்டை சேர்ந்த இஸ்லாமியர்கள் அங்கு சென்று வழிபாடு நடத்த அரசு தடை விதித்திருந்தது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியாவை சேர்ந்த முஸ்லீம்களுடன், வங்கதேச நாட்டை சேர்ந்த 5 முஸ்லீம்கள் தடையை மீறி உள்ளே சென்று தொழுகையில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் குறித்து தொல்பொருள் ஆய்வு துறை தாஜ் மஹால் மசூதி கமிட்டியிடம் புகார் அளித்தது.
இதையடுத்து அந்த கமிட்டியின் தலைவர் இப்ராஹிம் ஹூசைன் ஜியாதி கூறுகையில், �இந்தியாவை சேர்ந்த முஸ்லீம்களை தவிர, பிற நாட்டு இஸ்லாமியர்கள் தாஜ் மஹாலுக்குள் சென்று தொழுகை நடத்த அனுமதியில்லை. ஆகவே இனி, வெள்ளிக்கிழமைகளில் தாஜ் மஹாலுக்கு தொழுகை செய்ய வரும் இஸ்லாமியர்கள் தங்களது அடையாள ஆவணங்களை கட்டாயம் கொண்டு வர வேண்டும். அடையாள அட்டை இல்லையென்றால் உள்ளே சென்று தொழுகை நடத்த அனுமதிக்க முடியாது�. இவ்வாறு அவர் கூறினார்.
Category: மாநில செய்தி


0 comments